கிறிஸ்துமஸ் விழாவில் நாட்டு நடப்புகளை பேசிய விஜயகாந்த்! ராம மோகன்ராவை போட்டுத் தாக்கினார்..!!

Bookmark and Share

கிறிஸ்துமஸ் விழாவில் நாட்டு நடப்புகளை பேசிய விஜயகாந்த்! ராம மோகன்ராவை போட்டுத் தாக்கினார்..!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதிய தரிசன பெதஸ்தா திருச்சபை போதகர் டி.சாமுவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.விழாவில் பலருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கிறிஸ்துமஸ்  கேக்குகளும், பிரியாணியும் வழங்கினார்.

பின்னர் அவர் பேசுகையில்,

கிறிஸ்துமஸ் குறித்து அவ்வளவாக பேசவில்லை. மாறாக தினமலரையும், குமுதம் ரிப்போர்ட்டரையும் ஒரு பிடி பிடித்தார். அவர்களுக்கு நான் பயப்படப்போவதில்லை என்றார்.

அப்படியே ஒரு ஜம்ப் அடித்து ரூபாய் நோட்டு செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பினால் பொதுமக்கள் வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீடு மற்றும்அலுவலகத்தில் நடைபெற்ற வருமான வரி துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

பொதுப்பணித்துறையில் ராமமோகன்ராவ் பணியாற்றும்போதே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஊழலை ஒழிக்க லோக் ஆயுக்தாவை கொண்டு வர வேண்டும். இல்லாதவர்களுக்கு இயன்றதை செய்ய வேண்டுமென உலகில் உள்ள எல்லா மதங்களும் வலியுறுத்தி வருகின்றன.

இது தான் நம் கட்சியின் கொள்கையாக இருந்து செயல்பட்டு வருகிறது.டிசம்பர் மாதம் என்றாலேயே டேஞ்சர், டேமேஜ் என ஆகிவிட்டது. பெரியார், எம்ஜிஆர் போன்ற பெரிய தலைவர்களும் இறந்தது இந்த மாதத்தில் தான்.தானே புயல் தேசம், கடந்த ஆண்டு கனமழை இந்த ஆண்டு வார்தா புயலால் சேதமும் ஏற்பட்டுள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக தமிழக அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால், புறநகர் பகுதிகளில் இன்னும் நிலைமை சீராகவில்லை.கிறிஸ்துமஸ் விழாவில் விஜயகாந்த் இவ்வாறு அவர் பேசினார்.


Post your comment





Related News
கமலுக்கு போட்டியாக ரஜினி எடுத்த அதிரடி முடிவு
கல்லூரி அங்கீகாரத்தை புதுப்பிக்காததால் வழக்கு: ஸ்ரீகாந்தின் மனைவி கோர்ட்டில் ஆஜர்
நடந்தது போராட்டம்- இலங்கை பயணம் குறித்து ரஜினி வேறு பதில் கூறுவாரா?
இலங்கையில் வெடிக்கும் போராட்டம், ரஜினிக்கு ஆதரவாக இப்படியா?
ரஜினிக்கு பணத்தாசையா? லாரன்ஸ் கருத்து
ரஜினிகாந்த் இலங்கை பயணம் ரத்து குறித்து ராஜபக்சே மகன் கோபக்கருத்து
ரஜினிகாந்த் தமிழர்களை சந்திப்பதை தடுக்கும் குழப்பவாதிகள் - விடுதலைப்புலிகள் எச்சரிக்கை
அரசியல் சுயலாபத்தால் சூப்பர்ஸ்டாரை தர்மசங்கடத்துக்குள்ளாக்கி விட்டார்கள் - முடிவை மாற்றிய லைக்கா நிறுவனம்
என் மீனவ சகோதரர்களின் பிரச்சினையை இலங்கை அதிபரிடம் பேசித் தீர்வு காண விரும்பினேன் - ரஜினி
தமிழக அரசியல்வாதிகளுக்கு எதிராக நாசூக்காக சீறிய ரஜினி.. அறிக்கையில் கறார்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions