சென்னையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்

Bookmark and Share

சென்னையில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை அகற்ற விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் முறையான அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மாநகராட்சி கண்டறிந்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ அனுமதிபெற்ற பின்னர் தான் புதிதாக கட்டிடம் கட்டப்பட வேண்டும். ஆனால் மாநகராட்சியின் அனுமதி இல்லாமல் சென்னையில் பல்வேறு முக்கிய இடங்களில் முறையான அனுமதியில்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மாநகராட்சி கண்டறிந்து அவர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுமட்டுமல்லாமல் கட்டிடம் கட்டுபவர்களுக்கு துணையாக மின்வாரியம், மின்சார இணைப்பை கொடுத்திருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. சாதாரண மக்கள் கட்டுகின்ற வீடுகளுக்கு மின் இணைப்பு தரவேண்டும் என்று கேட்டால், பல காரணங்களை சொல்லி மின் இணைப்பை தரமறுக்கிறார்கள்.

ஆனால் ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களுக்கு, மின் இணைப்புக்கு முறையான ஆவணம் செலுத்தாமல், இலஞ்சம் பெற்றுகொண்டு மின் இணைப்பு வழங்கப்படுவதாக அங்குள்ள மக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். வாகனங்கள் சென்றுவர சாலை ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்வது போக்குவரத்திற்கு இடையூராக இருக்கிறது.

தமிழக அரசும், மாநகராட்சியும் இதில் தலையிட்டு சாலையோரங்களில் உள்ள முறையற்ற ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றவேண்டும். இதேபோல் விதியை மீறி மின் இணைப்பு கொடுத்த அதிகாரிகள் மீதும் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.


Post your comment

Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது
ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா?
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions