விஜயகாந்த் இடத்தை பிடிக்கும் ஆர்கே!

Bookmark and Share

விஜயகாந்த் இடத்தை பிடிக்கும் ஆர்கே!

தமிழ் சினிமாவில் கமல்-ரஜினி என்ற இரு துருவங்கள் வலம்வந்து கொண்டிருந்தபோது, 3வதாக களமிறங்கியவர் விஜயகாந்த். ஒரு கட்டத்தில் வருடத்துக்கு தனது நடிப்பில் மூன்று நான்கு படங்கள் வரை வெளியிட்டு பிசியான நடிகரானார்.

அதோடு, ஆக்சனில் முத்திரை பதித்து வந்த விஜயகாந்தின், சண்டை காட்சிகளுக்கென்று தமிழ்நாட்டில் ஒரு ரசிகர் வட்டமும் உருவானது. அதனால் தனக்கென ஒரு பாணியை ஏற்படுத்தி, சண்டை காட்சிகளை வித்தியாசப்படுத்தி வந்த விஜயகாந்த், அதிகமான படங்களில் போலீஸ் வேடங்களில் நடித்தார்.

ஆனால், தற்போது அவர் முழுநேர அரசியல்வாதியாகி விட்டதால், நடிப்பதில் இருந்து விலகி விட்டார். இந்தநிலையில், அவர் இடத்தை பிடிக்கும் முயற்சியில் தற்போது களமிறங்கியிருக்கிறார் ஆர்கே. எல்லாம் அவன் செயல், அழகர்மலை, புலிவேசம், அவன் இவன், ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ள அவர், தற்போது என் வழி தனி வழி என்ற படத்தில் நடித்துள்ளர்.

இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இதற்கிடையே, நேற்று தனது அடுத்த படமாக வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்தையும் தொடங்கி விட்டார்.ஏற்கனவே அவர் நடித்த எல்லாம் அவன் செயல் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷே, என் வழி தனி வழி மற்றும் வைகை எக்ஸ்பிரஸ் படங்களை இயக்குகிறார்.

அதோடு, என் வழி தனி வழி படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் ஆர்கே, வைகை எக்ஸ்பிரஸ் படத்திலும் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படி அவர் ஆக்சன் கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதற்கு முக்கிய காரணமே அடுத்தபடியாக தமிழ் சினிமாவில் ஒரு ஆக்சன் ஹீரோவாகி விஜயகாந்த் இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதானாம்.

இதை நேற்றைய தினம் வைகை எக்ஸ்பிரஸ் படத்தின் தொடக்க நாளின்போது நடந்த பிரஸ்மீட்டில் அப்படக்குழுவினர் ஆர்கே முன்னிலையிலேயே தெரிவித்தனர். அப்போதும் தனது விருப்பம் அதுதான் என்பதுபோல் தலையசைத்தபடி அதற்கு க்ரீன் சிக்னல் கொடுத்துக்கொண்டிருந்தார் ஆர்கே. 


Post your comment





Related News
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
கேப்டனின் இடி முழக்கம்
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!
பிரண்ட்ஸ் பட விஜயலக்ஷ்மிக்கு இப்படியொரு சோகமா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions