கேப்டன் விஜயகாந்த் மகன் ஜோடியாக பாலிவுட் நடிகை

Bookmark and Share

கேப்டன் விஜயகாந்த் மகன் ஜோடியாக பாலிவுட் நடிகை

5 வருடங்களுக்கு பிறகு விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார்.

இதில் அவருடைய மகன் சண்முக பாண்டியனும் இணைந்து நடிக்கிறார். ‘தமிழன் என்று சொல்’ என்று பெயர் வைத்துள்ளனர். 

சண்முகபாண்டியன் ஜோடியாக பாலிவுட் நடிகை ஸோயா அப்ரோஸ் ஜோடியாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. ‘ஹம்சாத்சாத்’ என்ற படத்தில் அறிமுகமான இவர் லக்னோவை சேர்ந்தவர்.

தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு வெளியான ‘தி எக்ஸ்போஸ்’ படத்தில் ஸோயா அப்ரோஸ் பிரபலமானார். இது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களில் வெளியாகலாம் என்று தெரிகிறது.

இது தவிர இன்னொரு நாயகியாக நடிக்க நிஷாபதானியுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. பிரபல பவுடர் விளம்பர மாடல் ஆன இவர் தற்போது தெலுங்கில் ‘லோபர்’ என்ற படத்தில் வருண்தேஜுடன் நடித்து வருகிறார்.

விஜயகாந்தின் மனைவி வேடத்தில் நடிக்க அவருடன் எற்கனவே ஜோடியாக நடித்த பிரபல நாயகிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் பெயர் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
கேப்டனின் இடி முழக்கம்
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!
பிரண்ட்ஸ் பட விஜயலக்ஷ்மிக்கு இப்படியொரு சோகமா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions