
விஜய்க்கு எப்படி செந்தூர பாண்டி படத்தில் நடித்து ஆரம்பத்தில் அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தாரோ விஜயகாந்த், அதேபோல் சூர்யாவுக்கும் பெரியண்ணா படத்தில் நடித்து உறுதுணையாக இருந்தார்.
அதையடுத்து, டைரக்டர் பாலா தயாரிப்பில் சிங்கம்புலி இயக்கத்தில் சூர்யா நடித்த மாயாவி படத்திலும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்தார் விஜயகாந்த். அந்த அளவுக்கு தனது இரண்டு படங்களில் விஜயகாந்த் நடித்திருந்தபோதும், தன்னுடைய திருமணத்திற்கு அவரை அழைக்கவில்லை சூர்யா.
இதுபற்றி சூர்யா கூறுகையில்,
நான் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்தபோது விஜயகாந்துடன் நடித்த பெரியண்ணா என்னை ரசிகர்களுக்கு முழுசாக அடையாளம் காட்டிய படமாகும். அந்த படத்தில் விஜய்காந்துடன் நடித்தது எனக்கு பெரிய ப்ளசாகவும் அமைந்தது.
அதுமட்டுமின்றி டைரக்டர் பாலாவின் முதல் தயாரிப்பான மாயாவி படத்திலும் விஜயகாந்த் ஒரு வேடத்தில் நடித்தார். அந்த படத்தின் படப்பிடிப்பில் மதிய இடைவேளை நேரத்தில்கூட ஓயவெடுக்காமல் நடித்துக்கொடுத்தார்.
அப்படிப்பட்ட விஜயகாந்த் சாரை எனது திருமணத்திற்கு அழைக்க தவறிவிட்டேன். அதை இப்போது நினைத்தாலும் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்கிறார் சூர்யா. ஆக, 2006ல் சூர்யா-ஜோதிகா திருமணம் நடைபெற்றது. அந்த வகையில், 9 வருடங்கள் கழித்து இப்படியொரு செய்தியை தனது தரப்பில் இருந்து வெளியிட்டிருக்கிறார் சூர்யா.
Post your comment