அண்ணனின் பேட்மிண்டன் அணிக்கு விளம்பர தூதராகிய சண்முக பாண்டியன்

Bookmark and Share

அண்ணனின் பேட்மிண்டன் அணிக்கு விளம்பர தூதராகிய சண்முக பாண்டியன்

கேப்டன் விஜயகாந்தின் மூத்தமகன் விஜய பிரபாகரன் சென்னை பேட்மிண்டன் அணியை வாங்கியுள்ளார். அந்த அணிக்கு சென்னை ஸ்மாஷர்ஸ் என்று பெயரிட்டுள்ளனர். அந்த அணியின் அறிமுக விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அணியில் உள்ள வீரர், வீராங்கனைகளை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். பின்னர் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, சிறு வயதிலிருந்தே தனக்கு விளையாட்டில் ஆர்வம் இருந்ததாலும், தன் தந்தையின் ஆதரவாலும் இந்த அணியை வாங்கியுள்ளேன். இந்த அணியில் நிறைய இளம் வீரர்களும், குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடிய பி.வி.சிந்து சென்னை அணிக்காக விளையாடுவது எங்கள் அணிக்கு பலம். மேலும் சிக்கிரெட்டி (Sikkireddy), ஜெர்ரிசோப்ரா (Jerrychopra), கிருஷ்ணபிரியா (Krishnapriya)  ஆகிய இந்திய வீரர்களும், சோனி (Sony), சைமன்சன்டோசோ Simonsantoso, பியா (Pia) ஆகிய இந்தோனேஷிய வீரர்களும், மேலும் இங்கிலாந்தை சேர்ந்த கிரிஷ்ஆட்காக் (Chrisadcock), பிரான்ஸை சேர்ந்த பிரிஷ் (Brice), கனடாவை சேர்ந்த டோபி (Toby) ஆகியோர் உள்ளனர். மேலும் கங்குலி பிரசாத் பயிற்சியாளராய் இருப்பது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறார்கள்.

எங்கள் அணியின் அம்பாசஸிடராக வளர்ந்து வரும் இளம் நாயகன் கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் ஷண்முக பாண்டியன் உள்ளார். தனது சகோதரர் என்பதால் சண்முக பாண்டியனை அம்பாஸிடராக நியமிக்கவில்லை. இயல்பாகவே அம்பாஸிடர்க்கு அதிக உயரம் தேவைப்படுவதால் அணியினர் அவரை தேர்வு செய்துள்ளனர்.

சென்னை அணியின் லோகோவில் சிங்கமுகத்தை வைத்ததற்கு காரணம், தான் சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகர் என்றும், இரண்டு ஆண்டுகள் சென்னை அணி இல்லாததால் அந்த அணியை ஞாபகபடுத்தும் வகையில் சிங்க லோகோவை வைத்துள்ளோம் என்றார்.

சென்னை கிரிக்கெட் அணிக்கு விசில் போடு, சென்னை புட்பால் அணிக்கு சுத்தி போடு என்ற முழக்கம் இருப்பது போல சென்னை பாட்மிண்டன் அணிக்கு ஸ்மாஷர்ஸ் போடு என்ற முழக்கத்தை இந்த அணிக்கு வைத்துள்ளனர்.

மஞ்சள் நிறத்திலான சென்னை அணியின் ஜெர்ஸியையும் அறிமுகப்படுத்தினர். சென்னை நேரு விளையாட்டரங்கில் வெள்ள நிவாரணபொருட்கள் வைத்துள்ளதால் அங்கு போட்டிகளை நடத்த இயலவில்லை என்று மேலும் விஜய பிரபாகரன் கூறினர். 


Post your comment

Related News
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
கேப்டனின் இடி முழக்கம்
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!
பிரண்ட்ஸ் பட விஜயலக்ஷ்மிக்கு இப்படியொரு சோகமா? - அதிர்ச்சியான ரசிகர்கள்.!
பிரபு தேவாவின் அடுத்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் - அதிரடி தகவல்.!
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய காளி - படக்குழுவினர் அறிவிப்பு.!
ஜல்லிகட்டு பற்றி நாம் அறியாத பல விஷயங்களை "மதுரவீரன்" பேசும் – சண்முகபாண்டியன்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions