விஜயசேதுபதியின் ஆஸ்தான இயக்குனர்கள்!

Bookmark and Share

விஜயசேதுபதியின் ஆஸ்தான இயக்குனர்கள்!

விஜயசேதுபதி நாயகனாக நடித்த முதல் படத்தை இயக்கியவர் சீனுராமசாமி. அவர் தற்போது தனது இடம் பொருள் ஏவல் படத்தில் அவரை மீண்டும் நாயகனாக்கியிருக்கிறார்.

அதேபோல், அதையடுத்து விஜயசேதுபதி நடித்த பீட்சா படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ், பின்னர் தான் இயக்கிய ஜிகர்தண்டாவில் ஒரு சிறிய ரோலில் அவரை நடிக்க வைத்தவர், இப்போது இறைவி படத்தில் மீண்டும் நாயகனாக நடிக்க வைக்கிறார்.

அதேபோல், சூதுகவ்வும் படத்தை இயக்கிய நலன்குமாரசாமி, தற்போது தான் இயக்கும் எஸ்கிமோ காதல் படத்தில் மீண்டும் விஜயசேதுபதியையே அப்படத்தின் நாயகனாக்கியிருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமாரும் தனது அடுத்த படத்தில் விஜயசேதுபதியையே நடிக்க வைக்கிறார்.

ஆக, விஜயசேதுபதியை வைத்து நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுல் ஆகியோரை தவிர மற்ற இயக்குனர்கள் அனைவருமே அவரை தங்களது செண்டிமென்ட் ஹீரோவாக நினைத்து தொடர்ந்து நடிக்க வைத்து வருகின்றனர்.  

அதேபோல் விஜயசேதுபதியும், தன்னை ஹிட் பட ஹீரோவாக்கிய இந்த இயக்குனர்கள் தன்னை ஹீரோ வேசம் இன்றி கெஸ்ட் ரோலில் நடிக்க அழைத்தாலும் மறுக்காமல் நடிக்க தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்.

ஆக இவர்களெல்லாம் எப்படி விஜயசேதுபதியை தங்களது அபிமான ஹீரோவாக நினைக்கிறார்களோ, அதேபோல் விஜயசேதுபதியும் மேற்படி இயக்குனர்களை தனது அபிமான இயக்குனர்களாகவே நினைக்கிறாராம். 

 


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
கேப்டனின் இடி முழக்கம்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions