தூக்குத்தண்டனை கைதியாக விஜயசேதுபதி!

Bookmark and Share

தூக்குத்தண்டனை கைதியாக விஜயசேதுபதி!

ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று இருந்து வரும் பழைய பார்முலாவை உடைத்துக்காட்டியவர் விஜயசேதுபதி. அந்த வகையில், பீட்சா படத்தில் ஒரு நெகட்டிவான ரோலில் நடித்த அவர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில், அதிகமாக பேசாமல் தன்னை சுற்றியிருப்பவர்களே பேசும் ஒரு வித்தியாசமான ரோலில் நடித்தார்.

அப்படி விஜயசேதுபதி நடித்த இரண்டு படங்களுமே ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதால், தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட் நடிகரானார். அதோடு, ரம்மி படத்தில் இனிகோ ஹீரோவாக நடிக்க, அவரது நண்பனாக ஒரு கேரக்டரில் நடித்தார் விஜயசேதுபதி.

இந்த மாதிரி ஹீரோயிசம் என்பதில் இருந்து விடுபட்டு, வித்தியாசமான கதாபாத்திரங்களாக தேடிப்பிடித்து நடித்து வரும் விஜயசேதுபதி, தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடித்துள்ள புறம்போக்கு படத்தில் தூக்குத்தண்டனை கைதியாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக விஜயசேதுபதியை, ஜனநாதன் முதல்நாள் தொடர்பு கொண்டபோது, படப்பிடிப்பில் இருந்த அவர் உடனே அவரை நேரில் சென்று சந்தித்ததோடு, உங்கள் படத்தில் என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிப்பேன் சார் என்றாராம்.

அதன்பிறகுதான் இந்த படத்தில் ஆர்யா ஒரு போராளியாக நடிக்கிறார். உங்களுக்கு தூக்குத்தண்டனை கைதி வேடம் என்றாராம் எஸ்.பி.ஜனநாதன்.

அதைக்கேட்டு சந்தோசமடைந்த விஜயசேதுபதி, அவர் கதை சொல்லச்செல்ல ஆர்வத்துடன் கேட்டவர், படப்பிடிப்பில் இருந்த நாட்களில் அந்த கதாபாத்திரம் எந்த மாதிரி பேச வேண்டும், நடக்க வேண்டும் என்பதையே முழுநேரமும் செய்து கொண்டேயிருந்தாராம்.

அதன்காரணமாக விஜயசேதுபதியின் ரோல் படத்திலும் ரொம்ப அற்புதமாக வந்திருக்கிறதாம். அதனால், புறம்போக்கு என்னும் பொதுவுடமை படம் தன்னை அடுத்த தளத்துக்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று ரொம்பவே எதிர்பார்க்கிறாராம் விஜயசேதுபதி.


Post your comment





Related News
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
கேப்டனின் இடி முழக்கம்
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions