குறும்பட டைரக்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜயசேதுபதி!

Bookmark and Share

குறும்பட டைரக்டர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விஜயசேதுபதி!

குறும்படங்களில் நடித்து நடிகரானவர் விஜயசேதுபதி. அதோடு சீனுராமசாமியின் தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆன அவர், பின்னர் நடித்த பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என தனது ஆரம்ப காலத்தில் குறும்பட டைரக்டர்களின் இயக்கத்தில்தான் நடித்தார்.

அப்படி அவர் நடித்த பல படங்கள் அவருக்கு வெற்றியாகவே அமைந்து வந்தன. ஆனால், இப்போது விஜயசேதுபதியின் நிலையில் நிறைய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதாவது புறம் போக்கு படத்தில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் நடிக்கத் தொடங்கிய பிறகு பிரபல டைரக்டர்களின் படங்களில் நடிக்கவே முதலிடம் கொடுக்கத் தொடங்கியிருக்கிறார். அதனால் விஜயசேதுபதியை மனதில் கொண்டு வித்தியாசமான கதைகளுடன் அவரை தொடர்பு கொண்ட சில குறும்பட டைரக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மீறி அவர்கள் அவரை துரத்தினால், இன்னும் 5 வருடங்கள் வரை நான் ரொம்ப பிசி பாஸ். அதனால் அதற்குள் ஏதாவது படத்தை இயக்கி விடுங்கள் அதன்பிறகு நாம் சந்திப்போம் என்கிறாராம்.

ஆக, ஏதாவது படத்தை இயக்கிவிட்டு என்னிடம் வாருங்கள். புதிய டைரக்டர்களை நம்பி நான் நடிக்க தயாராக இல்லை என்பதை அவர் சொல்லாமல் சொல்வதால், அவருக்காகவே காத்திருந்த சில குறும்பட இயக்குனர்கள் இப்போது விஜயசேதுபதியை மறந்து விட்டு வேறு நடிகர்களை நாடி வருகின்றனர். 


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions