தோல்வி ஜுரத்தில் இருந்து மீண்ட கேப்டன்! 9 ஆம் தேதி களத்திற்கு வருகிறார்! தொண்டர்கள் உற்சாகம்!

Bookmark and Share

தோல்வி ஜுரத்தில் இருந்து மீண்ட கேப்டன்! 9 ஆம் தேதி களத்திற்கு வருகிறார்! தொண்டர்கள் உற்சாகம்!

சட்டமன்றத்தேர்தலில் வைகோவின் வழிகாட்டுதலால் மக்கள் நலக் கூட்டணியில் சேர்ந்த கேப்டன் படுதோல்வியை சந்தித்தார். வாக்கு சதவீதம் அதல பாதாளத்திற்கு சென்றது. இந்த தோல்வி ஏற்படுத்திய மனவேதனையால் தீவிர அரசியலில் பற்றற்று இருந்தார் கேப்டன்.

அவர் என்ன செய்தாலும் அதனை கேலியாக்க ஒரு கூட்டம் தயாராக உள்ளது. இதனால் வெறுத்துப் போய் இருந்தார்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தேமுதிக மட்டுமின்றி அனைத்து எதிர்கட்சிகளுக்கும் ஒரு வித தெம்பை அளித்துவிட்டது.

திமுகவிற்கு அடுத்தபடியாக எப்படியாவது இரண்டாவது இடத்தை பிடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டு கிளம்பிவிட்டன.

அன்புமணி ராமதாஸ் இதற்காக காய்களை நகர்த்தி வரும் நிலையில், தற்போது விஜயகாந்தும் களம் புக தயாராகி விட்டார்.

வரும் ஒன்பதாம் தேதி ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார். இது அவரது அடுத்த கட்ட நகர்வுக்கான தொடக்கம் என அக்கட்சி தொண்டர்கள் உற்சாகம் பொங்க கூறியுள்ளனர்.


Post your comment

Related News
தேமுதிக பொதுச் செயலாளராகிறாரா பிரேமலதா விஜயகாந்த்?
விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி- வழக்கமான பரிசோதனையே என தேமுதிக விளக்கம்!
நடிகர் விஜயகாந்திற்கு திடீர் உடல்நல குறைவு! ரசிகர்கள் சோகம்
ராஜா ராணியில் முதலில் நடிக்கவிருந்தது விஜயகாந்த் தான், இந்த செய்தி தெரியுமா?
ஆர்.கே.நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வடசென்னை மா.செ. மதிவாணன்: விஜயகாந்த்
பசுந்தோல் போர்த்திய ஊழல்வாதிகளுக்கு சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை:விஜயகாந்த்
மீண்டும் வேலையை காட்டிய விஜயகாந்த்... பெரம்பலூரில் தொண்டருக்கு பளார்
பீட்டாவுக்கு ரிவீட் கொடுத்த விஜயகாந்த்
மத்திய அரசு தப்பிக்க பின் லேடனின் படத்தை இழுக்கிறது... விஜயகாந்த் கண்டனம்
பட்டு ரோஸ் ஆடைகட்டி... அசத்தலாய் 27வது திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த் பிரேமலதாAbout Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions