மத்திய அரசு தப்பிக்க பின் லேடனின் படத்தை இழுக்கிறது... விஜயகாந்த் கண்டனம்

Bookmark and Share

மத்திய அரசு தப்பிக்க பின் லேடனின் படத்தை இழுக்கிறது... விஜயகாந்த் கண்டனம்

மாணவர்கள் போராட்டத்தில் ஒசாமா பின்லேடனின் படம் இருந்ததுப்போல் வாட்ஸ்ப், ஊடகங்களில் வரவில்லை என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மத்திய அரசு தப்பிப்பதற்காக இதுபோல் கூறியுள்ளதாகவும் விஜயகாந்த் தெரிவித்தார். 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, ''ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியது தவறு. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசுதான் நடவடிக்கை எடுத்தது" என்றும் விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.

மாணவர்கள் போராட்டத்தில் ஒசாமா பின்லேடன் படம் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டது குறித்த கேள்விக்கு பதலளித்த விஜயகாந்த், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பின்லேடன் படம் வைக்கப்படவில்லை என்றார்.

பின்லேடன் படம் இருந்ததாக எந்த ஊடகங்களிலும் வாட்ஸ்அப்பிலும் வரவில்லை என்றும் அவர் கூறினார். மத்திய அரசு தப்பிப்பதற்காகவே இதுபோல் கூறியுள்ளாதாகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார். விவசாயிகள் தற்கொலை பற்றிய கேள்விக்கு அறிக்கையை பாருங்கள் என விஜயகாந்த் பதிலளித்தார்.


Post your comment





Related News
கேப்டனின் இடி முழக்கம்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions