பட்டு ரோஸ் ஆடைகட்டி... அசத்தலாய் 27வது திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த் பிரேமலதா

Bookmark and Share

பட்டு ரோஸ் ஆடைகட்டி... அசத்தலாய் 27வது திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த் பிரேமலதா

மதுரைக்காரர் விஜயகாந்துக்கு மதுரையே குலுங்க குலுங்க 1990 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி கருணாநிதி தலைமையில் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் அவர் தனது 27வது திருமண நாளை குடும்பத்தினருடன் உற்சாகமாக கொண்டாடியுள்ளார். கருணாநிதி தவிர விஜயகாந்தின் மனம் கவர்ந்த தலைவர் மூப்பனார், இளையராஜா, சத்யராஜ், பிரபு, எஸ்.எஸ்.சந்திசந்திரசேகர், பாண்டியன், தியாகு, தாணு, இராம.நாராயணன், பாரதிராஜா, மணிவண்ணன், எஸ்.பி.முத்துராமன், சங்கர்கணேஷ், என திரையுலக முக்கிய பிரபலங்கள் அனைவரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

சினிமாவில் இருந்து நடிகர் சங்கத்தலைவராக உயர்ந்து அரசியல் கட்சி ஆரம்பித்து சட்டசபை எதிர்கட்சி தலைவராக உயர்ந்து இந்த 27 ஆண்டுகளில் விஜயகாந்த் வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன. திமுக தலைவர் கருணாநிதியை எதிர்ப்பதற்காகவே கட்சி தொடங்கினார் விஜயகாந்த். இந்த நினைவுகளை அசைபோட்டவாரே தனது 27வது திருமண நாள் விழாவை உற்சாகமாக கொண்டாடினார் விஜயகாந்த்.

ஆண்டு தோறும் ஒரே வண்ணத்தில் உடைகள் அணிந்து போட்டோவிற்கு குடும்பத்துடன் போஸ் கொடுப்பார் விஜயகாந்த். 25வது ஆண்டு திருமண நாளில் நீல கலர் ஆடை அணிந்திருந்தனர். இந்த ஆண்டு ரோஸ் நிற ஆடையை அனைவரும் அணிந்திருந்தனர்.


ஆண்கள் அனைவரும் ரோஸ் நிற சட்டை, ரோஸ் கரை வைத்த வேஷ்டி அணிந்திருக்க, பிரேமலதா ரோஸ் நிற பட்டுப்புடவை அணிந்து உற்சாகமாக களை கட்டியது திருமண நாள் விழா.

விஜயகாந்த் திருமண நாளை முன்னிட்டு அவரது கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறியுள்ளனர். அண்ணன், அண்ணியாருக்கு திருமண நாள் வாழ்த்து கூற வயதில்லை வணங்குகிறோம் என்று பதிவிட்டு வீடியோவும் பதிவிட்டுள்ளனர்.

விஜயகாந்த் பிரேமலதா தம்பதியரின் மகன்கள் விஜயபிரபாகரன் மற்றும் சகாப்தம் படநாயகன் சண்முகப்பாண்டியன் ஆகியோர் தங்களின் பெற்றோரிடம் ஆசி பெற்றனர். பாசமான பெற்றோருக்கு அழகாக பரிசுப்பொருள் ஒன்றையும் அளித்தார்களாம்.


Post your comment

Related News
கேப்டனின் இடி முழக்கம்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions