மீண்டும் வேலையை காட்டிய விஜயகாந்த்... பெரம்பலூரில் தொண்டருக்கு பளார்

Bookmark and Share

மீண்டும் வேலையை காட்டிய விஜயகாந்த்... பெரம்பலூரில் தொண்டருக்கு பளார்

தொண்டர்களை அடிப்பது, பத்திரிகையாளர்களை விமர்சிப்பது என்பது தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கம். சிறிது காலம் அமைதியாக இருந்த விஜயகாந்த், பெரம்பலூரில் நேற்று தொண்டர் ஒருவரின் கன்னத்தில் அறைந்து தமது திருவிளையாடலை மீண்டும் அரங்கேற்றியுள்ளார்.

பொதுக் கூட்டங்களில் பேசும்போதும் பத்திரிகையாளர்களை சந்திக்கும் போதும் நிதானமற்றவராகவே நடந்து கொள்வார் விஜயகாந்த். பொதுவாக ஒருமையில் பேசுவதும் பத்திரிகையாளர்கள் மீது காறி துப்புவதும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

கட்சி தொண்டர்களுக்கு எந்த நேரத்தில் விஜயகாந்திடம் இருந்து தாக்குதல் வரும் என தெரியாத பதற்றம் இருக்கும். பொது இடம் என்று கூட பார்க்காமல் கட்சி நிர்வாகிகளை அடிப்பதையும் வழக்கமாக கொண்டவர் விஜயகாந்த். 

பெரம்பலூரில் 'உங்களுடன் நான்' என்கிற தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு நேற்று விஜயகாந்த் சென்றிருந்தார். அப்போது தொண்டர் ஒருவர் விஜயகாந்த் காது அருகே, கேப்டன் வாழ்க என கோஷம் போட்டார். 

இதில் கடுப்பான விஜயகாந்த், அந்த தொண்டர் கன்னத்தில் பளார் என அறைவிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 


Post your comment

Related News
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்
விடிந்தும் விடியாமலும் மகனை மதுரவீரனாக்கிய விஜயகாந்த்
த்தூ....என பத்திரிகையாளர்களை காறி துப்பியதற்கு பிரஸ் கவுன்சிலில் வருத்தம் தெரிவித்தார் விஜயகாந்த்!
தேமுதிக பொதுச் செயலாளராகிறாரா பிரேமலதா விஜயகாந்த்?
விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி- வழக்கமான பரிசோதனையே என தேமுதிக விளக்கம்!
நடிகர் விஜயகாந்திற்கு திடீர் உடல்நல குறைவு! ரசிகர்கள் சோகம்
ராஜா ராணியில் முதலில் நடிக்கவிருந்தது விஜயகாந்த் தான், இந்த செய்தி தெரியுமா?
ஆர்.கே.நகர் தொகுதி தேமுதிக வேட்பாளர் வடசென்னை மா.செ. மதிவாணன்: விஜயகாந்த்
பசுந்தோல் போர்த்திய ஊழல்வாதிகளுக்கு சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒரு எச்சரிக்கை:விஜயகாந்த்About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions