விஜயகாந்த் மைத்துனருக்கு பிடிவாரண்ட்!

Bookmark and Share

விஜயகாந்த் மைத்துனருக்கு பிடிவாரண்ட்!

கேப்டன் சினி ரிலீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சுதீஷ். இவர் மீது ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சினிமா விநியோகஸ்தர் மாரியம்மாள் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

விஜயகாந்த் நடித்த நரசிம்மா படத்தை வாங்கி விநியோகித்த வகையில் தயாரிப்பாளர் சுதீஷ் பண மோசடி செய்து விட்டார் என்பதுதான் அந்த வழக்கு.

பல ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வழக்கில் பலமுறை வாய்தா அனுப்பியும் சுதீஷ் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் அவருக்கு கடந்த மே மாதம் 27ந் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்தது.

அதன் பிறகு சுதீஷ் தனது வழக்கறிஞர் மூலம் கோர்டில் ஆஜராவதாக ஒப்புதல் தெரிவித்து பிடிவாரண்டை தளர்த்திக் கொண்டார். ஆனால் ஒப்புக் கொண்டபடி நேற்று சுதீஷ் ஆஜராகவில்லை. இதனால் நீதிமன்றம் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது.


Post your comment





Related News
கேப்டனின் இடி முழக்கம்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions