விஜயகாந்தைப் பாராட்டும் வலைத்தளவாதிகள்!

Bookmark and Share

விஜயகாந்தைப் பாராட்டும் வலைத்தளவாதிகள்!

நாட்டில் எது நடந்தாலும், அல்லது விஜயகாந்த் எங்கு பேசினாலும், எது செய்தாலும் அவரைக் கிண்டலடிப்பதற்கு என்றே ஒரு கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் யோகா தினம் அன்று செய்த பயிற்சியைக் கூட விஷம குணம் கொண்ட சிலர் கிண்டலடித்து மீமீக்களையும், கமெண்ட்டுகளையும் போட்டனர்.

ஆனால், அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்திய விஷயத்தில் வலைத்தளவாதிகள் உட்பட பலரும் விஜயகாந்தைப் பாராட்டி வருகிறார்கள்.ஒரு சீனியர் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருந்து கொண்டு அப்துல் கலாமுக்கு அவர் மதுரையில் அஞ்சலி செலுத்தியதோடு மட்டுமல்லாமல் நேற்று ராமேசுவரத்திலும் உடல் அடக்கம் நடந்த போது நேரடியாகச் சென்று அஞ்சலி செலுத்தியது அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தந்துள்ளது.

இத்தனை நாட்களாக விஜயகாந்தை வைத்து மீமீக்களை உருவாக்கி கிண்டலடித்தும், ட்ரோல் செய்து வந்தவர்களும் கூட அவரை நேற்று பாராட்டும் விதத்தில் மீமீக்களைப் போட்டனர்.

அது மட்டுமல்ல நேற்று ராமேஸ்வரத்தில் நடந்த கலாமின் உடல் அடக்க நிகழ்வின் போது கூட அரசியல் மாச்சரியங்களைக் கடந்து அன்புமணிக்கு அருகில் அவர் உட்கார்ந்திருந்ததும் ஒரு நெகிழ்ச்சியான பார்வையாகவே பார்க்கப்படுகிறது.

அதோடு, விஜயகாந்த் நேற்று பிரதமரிடம் நேரிடையாகவும், கடிதம் மூலமும் அப்துல் கலாம் பிறந்த தினத்தை தேசிய மாணவர் தினமாக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

மக்களின் எண்ணங்களைப் புரிந்து கொண்டு விஜயகாந்த் இந்த விஷயத்தில் செயல்பட்டுள்ளார் என்று அரசியல், சினிமா சாராத சிலரும் அவரைப் பாராட்டுகிறார்கள்.மேலே உள்ள படம் சமூக வலைதளங்களில் விஜயகாந்தை பாராட்டி வௌியிடப்பட்ட படம் அது. இதுபோன்று ஏகப்பட்ட பாராட்டுகள் அவருக்கு குவிந்தன.

 


Post your comment





Related News
கேப்டனின் இடி முழக்கம்
தமிழனின் பெருமையை கண்டுக்கொள்ளாத நடிகர்கள், விஜயகாந்த் மட்டுமே செய்த வேலை
எம்.ஜி.ஆர் உருவ சிலையை திறந்து வைத்த கேப்டன் விஜயகாந்த்.!
முன்னணி இயக்குனரின் இயக்கத்தில் விஜயகாந்த், மீண்டும் சினிமாவில்- ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜயகாந்த்க்கு பிடிவாரண்ட் - நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு.!
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மாட்டு இறைச்சி தடைக்கு எதிர்ப்பாக கலக்கல் பதிலடி கொடுத்த கேப்டன்
முன்னணி நடிகரை கிண்டல் செய்த விஜயகாந்த்
லோக் ஆயுக்தா வந்தால் திமுகவினர் கூண்டோடு சிறைக்கு செல்வார்கள்.. விஜயகாந்த் பேச்சு
வினுசக்கரவர்த்தி முடியாமல் இருந்த போது கேப்டன் விஜய்காந்த் மட்டும் தான் இதை செய்தார்- நெகிழ்ச்சி சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions