நடிகர் விஜயகுமார் பா.ஜனதாவில் இணைந்தார்

Bookmark and Share

நடிகர் விஜயகுமார் பா.ஜனதாவில் இணைந்தார்

கதாநாயகனாக அறிமுகமாகி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் விஜயகுமார். நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராக இருந்தார். சமீபத்தில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் தோல்வியை தழுவினார். 

அவர் இன்று திடீரென பா.ஜனதா கட்சியில் சேர்ந்தார். சென்னை தியாகராஜ நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு சென்ற அவர் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். 

பா.ஜனதா மேலிடத்தலைவர் முரளிதரராவ், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் விஜயகுமாருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றனர். பின்னர் சிறிது நேரம் விஜயகுமார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

நடிகர் விஜயகுமார் சந்திப்பு குறித்து பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறுகையில், நடிகர் விஜயகுமார் பா.ஜனதாவில் இன்று தன்னை இணைத்துக் கொண்டார். அவரது வருகை பா.ஜனதாவிற்கு பலமடங்கு வளர்ச்சியை தரும் என்றார்.


Post your comment





Related News
நடிகர் சங்க கட்டிட நிதிக்காக ரூ 5 லட்சம் வழங்கிய நடிகை விஜயகுமாரி!
பத்திரிகையாளர்கள் அவமதிப்பு வழக்கு: சூர்யா உள்ளிட்ட 8 நடிகர், நடிகைகளுக்கு பிடிவாரண்ட்
நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம்: நடிகர் சங்கம் வாழ்த்து
அஜித்துக்கு புகழாரம் சூட்டிய விஜயகுமார்!
முன் ஜாமீன் பெறும் முயற்சியில் மோசடி விநியோகஸ்தர்
தனுஷ் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ருக்மிணி
‘எம்.ஜி.ஆர்,சிவாஜி,ரஜினி,கமல்’ வைத்து வனிதா விஜயகுமார் தயாரிக்கும் படம்..!
நடிகை மஞ்சுளாவுக்கு அஞ்சலி செலுத்த‌ திரண்டு வந்த திரையுலகம்!
நடிகை மஞ்சுளா மரணம் - திரையுலகின‌ர் கவலை.
2வது கணவருடன் தனது அடுத்த ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions