தயாரிப்பாளர் ஆகிறார் விஜயலெட்சுமி

Bookmark and Share

தயாரிப்பாளர் ஆகிறார் விஜயலெட்சுமி

படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, பட தயாரிப்பாளர் ஆக திட்டமிட்டிருப்பதாக விஜயலெட்சுமி கூறியுள்ளார். தமிழ் திரைப்பட இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகளான விஜயலெட்சுமி, வெங்கட்பிரபுவின் அறிமுக படமான சென்னை -28லிலேயே இவரும் அறிமுகம் ஆனார். பின் அஞ்சாதே உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

வனயுத்தம் படத்தில் சந்தன கடத்தல் வீரப்பனின் மனைவியான முத்துலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தார். விஜயலட்சுமி கடைசியாக ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் நடித்திருந்தார்.

படங்களை அவசரப்பட்டு தேர்வு செய்யமாட்டேன். எனக்கு பிடித்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார் விஜயலட்சுமி. விஜயலட்சுமியை சில காலமாக படங்களில் காணவில்லையே என்று ரசிகர்கள் நினைத்தனர்.

சரி அவருக்கு பிடித்த கதாபாத்திரம் கிடைக்கவில்லை போன்று, கிடைத்தவுடன் நடிக்க வருவார் என்று ரசிகர்கள் நினைத்தனர். ஓய்வு சினிமாவில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளார் விஜயலட்சுமி.

இது குறித்து அவர் கூறுகையில்,

இனி நான் படங்களில் நடிக்க மாட்டேன். நடிப்பை நிறுத்திக் கொள்ள தீர்மானித்துள்ளேன் என்றார். தயாரிப்பு படங்களில் நடிக்காவிட்டாலும் திரைத் துறையில் தான் இருப்பேன். நான் படங்களை தயாரிக்கலாம் என்று முடிவு செய்துள்ளேன். இனி என்னை தயாரிப்பாளராக நீங்கள் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளார் விஜயலட்சுமி.

 


Post your comment





Related News
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
சென்னை 28 பட புகழ் விஜயலட்சுமிக்கு குழந்தை பிறந்தது
உலக சாதனை செய்த பாடகி வைக்கோம் விஜயலட்சுமி
பிரபல பாடகி வைக்கோம் விஜயலட்சுமி திருமணம் நின்றுவிட்டது- அதிர்ச்சியில் திரையுலகினர்
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கண் பார்வை கிடைத்துள்ளது
பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மிக்கு இசையமைப்பாளருடன் திருமணம்!
‘சென்னை 28’ பார்ட் 2 படத்துக்காக தனது முடிவை மாற்றி கொண்ட விஜயலக்ஷ்மி!
இயக்குநர் பெரோஸ் – நடிகை விஜயலட்சுமி திருமணம் இன்று நடைபெற்றது
திருமணத்திற்குப் பிறகு இஸ்லாம் மதத்திற்கு மாறமாட்டேன்: விஜயலட்சுமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions