அரசியலுக்காக தனுஷ், விஜய் ஆண்டனியை பயன்படுத்தும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்

Bookmark and Share

அரசியலுக்காக தனுஷ், விஜய் ஆண்டனியை பயன்படுத்தும் முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்த ஜெ. ஜெயலலிதா அவர்களின் இறப்புக்கு பின்னால் இருக்கும் மர்மத்தை அறிய வேண்டும் என்ற நோக்கில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக ஏற்கெனவே கூறியிருந்தார்.

அதன்படி இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய பன்னீர்செல்வம் அவர்களின் போராட்டம் மாலை 5 மணி வரை நடக்க இருக்கிறது. எழும்பூரில் பன்னீர்செல்வத்தை தொடர்ந்து பல இடங்களில் அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

இந்த போராட்ட களத்தில் தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் இடம்பெற்ற அம்மா அம்மா பாடலும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற நூறு சாமிகள் இருந்தால் என்ற பாடலும் அதிகம் ஒலிக்கப்பட்டு வருகிறது.

இந்த பாடல்கள் போராட்டக்காரர்கள் இடையே உணர்ச்சியையூட்டி வருவதாக கூறப்படுகிறது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions