பம்பரமாய் சுழலும் விஜய் ஆண்டனி!

Bookmark and Share

பம்பரமாய் சுழலும் விஜய் ஆண்டனி!

விஜய் ஆண்டனியின் பெயரைச்சொன்னாலே அடுத்து ஞாபகத்துக்கு வருவது நாக்கு முக்க பாடல்தான். அந்த அளவுக்கு அந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பெரும் கலக்கு கலக்கியது.

அதையடுத்து, தான் ஹீரோவாக நடித்த நான் படத்தில் மக்காஎலா மக்காஎலா, சலீம் படத்தில் மஸ்காரா பாடலும் அவரது அடுத்த சூப்பர் ஹிட் பாடல் வரிசையில் இடம்பிடித்தன.

இந்த நிலையில், தற்போது இந்தியா பாகிஸ்தான் படத்துக்கு தனது கீப்போர்ட் பிளேயர் தீனா தேவராஜன் என்பவருக்கு இசையமைக்கும் வாய்ப்பினை கொடுத்தார் விஜய் ஆண்டனி.

ஆனபோதும் அதற்கடுத்தபடியாக தான் தயாரித்து நடித்து வரும் பிச்சைக்காரன், திருடன், ஹிட்லர் ஆகிய படங்களுக்கு தானே மீண்டும் இசையமைக்கிறார்.

காரணம், அவரது இசையில் உருவான பல பாடல்கள் ஹிட்டானதால், அவரது அபிமானிகள் சினிமாவில் நடித்தாலும் தொடர்ந்து இசையமைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்களாம்.

அதனால் தற்போது 3 பட வேலைகளில் ஈடுபட்டிருக்கும் விஜய் ஆண்டனி, நடிப்பு ஒரு பக்கம், இசையமைப்பது இன்னொரு பக்கம் என பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News
காலமெல்லாம் அவர் அதை சுமந்து தான் ஆக வேண்டும் - பா.இரஞ்சித் பற்றி இயக்குநர் ராம் பேச்சு
வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்
"மோகினி" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்
தங்கமீன்கள், தரமணி இயக்குனருக்கு சர்வதேச அளவில் கிடைத்த புது அங்கிகாரம்!
இளம் இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறாரா தனுஷ்? வெளியான தகவல்
கார்ப்பரேட் நிறுவனங்களால் சினிமா துறை சீரழிந்து வருகிறது: இயக்குனர் சேரன் வேதனை
மெர்சல் விவகாரம்: எச்.ராஜா மன்னிப்பு கேட்க இயக்குனர் கவுதமன் வலியுறுத்த
அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்? சுசீந்திரன் விளக்கம்
சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்
அஜித் போல் நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும்- பிரபல இயக்குனர்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions