சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த விஜய் ஆண்டனி – புகைப்படம் உள்ளே!

Bookmark and Share

சிவகார்த்திகேயன் இடத்தை பிடித்த விஜய் ஆண்டனி – புகைப்படம் உள்ளே!

பிச்சைக்காரன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரதி கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் புதிய படம் சைத்தான். இதுவரை வக்கீல், டாக்டர், பிச்சைக்காரன் என விதவிதமான வேடங்களில் நடித்துவந்த விஜய் ஆண்டனி இப்படத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் லைக்ஸ் வாங்கியுள்ளது.முன்னதாக இப்படம் நவம்பர் 17-ல் வெளியாகும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் கரன்ஸி நோட்டு பிரச்சனையால் தற்போது இப்படம் டிசம்பர் 2-ம் தேதிக்கு தள்ளிபோய் உள்ளது.

இன்றைக்கு விஜய் ஆண்டனிக்கு இருக்கும் மார்கெட்டை மனதில்கொண்டு சத்யம் திரையரங்கில் இருக்கும் பெரிய பேனரில் சைத்தான் விளம்பரம் இடம்பெற்றுள்ளது. இதற்குமுன்பு ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கும் இந்த கௌரவம் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions