கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் விஜயகாந்த் ஆய்வு

Bookmark and Share

கலவரத்தால் பாதிக்கப்பட்ட நடுக்குப்பத்தில் விஜயகாந்த் ஆய்வு

சென்னை நடுக்குப்பம் பகுதியில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாரால் விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள், தங்களை காப்பாற்றிக் கொள்ள நடுக்குப்பம் பகுதியில் நுழைந்தனர். அவர்களுக்கு உணவும், பாதுகாப்பும் வழங்கியவர்கள் மீனவர்கள். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் மீனவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர்.

இதனிடையே போலீஸாருக்கும் வன்முறையாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின்போது நடுக்குப்பம் மீன் சந்தைக்கு தீ வைக்கப்பட்டது. வீடுகளின் முன்பிருந்த வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன. ஆட்டோக்கள், மீன் சந்தை உள்ளிட்டவற்றையும் போலீசார் தீக்கிரையாக்கினர். இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று நடுக்குப்பம் மீனவர் குடியிருப்பை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வன்முறையால் பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினேன். வன்முறைக்கு காரணமானவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Post your comment





Related News
பிளஸ் 2 பொதுத்தேர்வு .. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மாணவர்களுக்கு வாழ்த்துச் செய்தி
போராட்டக்காரர்கள் மீது தடியடி.. ஆளும்கட்சியின் அணுகுமுறை சரியில்லை: விஜயகாந்த்
தேர்தல் தோல்வி எதிரொலி – மீண்டும் நடிக்கவந்த விஜயகாந்த்!
பிரீமியர் லீக் ஆப் பேட்மிண்டன் -சென்னை அணியை வாங்கிய விஜயபிரபாகரன்
விஜயகாந்த் - அபிஷேக் பச்சன் திடீர் சந்திப்பு
விஜயகாந்த் மகனுடன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது
நடிகர் சங்க புது நிர்வாகிகள் விஜயகாந்துடன் திடீர் சந்திப்பு
25–வது திருமண நாள்: நானும் என் மனைவியும் விட்டுக்கொடுத்து வாழ்கிறோம்- விஜயகாந்த் பேச்சு
மலேசிய கடலில் 50 வில்லன்களுடன் மோதிய விஜயகாந்த் மகன்!
மகனின் படப்பிடிப்பை காண மலேசியா சென்றார் விஜயகாந்த்..!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions