நடிகர் சங்க புது நிர்வாகிகள் விஜயகாந்துடன் திடீர் சந்திப்பு

Bookmark and Share

நடிகர் சங்க புது நிர்வாகிகள் விஜயகாந்துடன் திடீர் சந்திப்பு

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. சரத்குமார் தலைமையிலான ஒரு அணியினரும், நாசர் தலைமையிலான மற்றொரு அணியினரும் இந்த தேர்தலில் போட்டியிட்டனர். தேர்தல் முடிவில் நாசர் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர்.

அதன்படி, நடிகர் சங்க தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும், பொருளாளராக கார்த்தியும், துணைத் தலைவர்களாக பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோரும் பதவியேற்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ஜெயலலிதாவை நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். அதேபோல், நேற்று இரவு தேமுதிக தலைவர் விஜயகாந்தை நடிகர் சங்க நிர்வாகிகளான நாசர், கார்த்தி, கருணாஸ், பொன்வண்ணன் மற்றும் பூச்சிமுருகன் எஸ்.வி.சேகர் ஆகியோர் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர்.

மரியாதை நிமிர்த்தமாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது தேமுதிக இளைஞரணி செயலாளர் எல்.கே. சுதீஷும் உடன் இருந்தார். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions