வருங்கால கணவரை இயக்குனராக்கிய விஜயலட்சுமி

Bookmark and Share

வருங்கால கணவரை இயக்குனராக்கிய விஜயலட்சுமி

காதலுக்கு கோட்டை கட்டிய இயக்குனர் அகத்தியனின் இளைய மகள் விஜயலட்சுமி. பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த விஜயலட்சுமி உதவி இயக்குனர் பெரோஸை காதலித்து வந்தார். விரைவில் இவர்கள் திருமணம் நடக்க இருக்கிறது.

வல்லினம் அறிவழகனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பெரோஸ்க்கு இயக்குனராக வேண்டும் என்பது லட்சியம். தற்போது தனது வருங்கால கணவரின் ஆசையை நிறைவேற்ற தயாரிப்பாளராகி இருக்கிறார் விஜயலட்சுமி. பெரோஸ் இயக்கத்தில் பண்டிகை என்ற படத்தை தயாரிக்கிறார்.

கிருஷ்ணா ஹீரோ, கயல் ஆனந்தி ஹீரோயின். இவர்கள் தவிர கருணாஸ், நிதின் சத்யா, மதுசூதனன், சரவணன், சண்முகராஜன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். ஆர்.எச்.விக்ரம் இசை அமைக்கிறார். பணத்துக்காக பந்தயம் தெருவில் சண்டைபோடுபவராக நடிக்கிறார் கிருஷ்ணா.

சமீபத்தில் பெங்களூருவில் பந்தயம் கட்டி சண்டைபோட்டு அதில் ஒருவர் இறந்தார். அதுபோன்ற ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படமாம். இந்த தெருச் சண்டையும், அதை சுற்றி ஒரு கும்பல் இயங்குவதுமான ஆக்ஷன் கதை.

சென்னையில் யாருக்கும் தெரியாமல் நடக்கும் பைக் ரேஸ். பாக்சிங் மாதிரி இந்த தெருச் சண்டையும் நடக்கிறதாம். அதைப் பற்றிய கதை என்கிறார்கள். சென்னையில் அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்குகிறது. 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions