விஜய் சேதுபதி படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!

Bookmark and Share

 விஜய் சேதுபதி படத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!

விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக், காயத்ரி மற்றும் நிஹாரிகா நடிப்பில், ஆறுமுக குமார் இயக்கத்தில் ,' Amme Nararyana Entertainment' மற்றும் ' 7C's Entertainment Private Limited' ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்'.

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் மலேசியாவில்  நடைபெற்ற நட்சத்திர விழாவில் மிக விமர்சையாக  நடைபெற்றது. தமிழ் சினிமாவின் பல நட்சத்திரங்கள் இந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.

இந்த ஆடியோவை மலேசிய நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் தத்தோ திரு.சரவணன் அவர்களும் Malindo Airlines நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சந்திரன் ராமமூர்த்தி அவர்களும்  இணைந்து வெளியிட்டனர். இப்பட பாடல்கள் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் டீசர் யூ டியூபில் மூன்று மில்லியன் வியூஸை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக வல்லுனர்களின் கணிப்பு படி இவை ஒரு வெற்றி படத்துக்கான அறிகுறிகள் என கருதப்படுகிறது. 

இந்த கணிப்பு மேலும் ஒரு பெரிய செய்தியால் ஊர்ஜிதமாகியுள்ளது. 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளது என்பதே இந்த பெரிய செய்தியாகும். குடும்பங்கள் ரசித்து கொண்டாடும் படங்களை மட்டுமே வாங்கும் சன் டிவி 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கியுள்ளது இப்படத்தின் பலத்தை பல மடங்கு கூட்டியுள்ளது. கூடிய விரைவில் ரிலீசாக தயாராகிக்கொண்டிருக்கும் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியுள்ளது.


Post your comment





Related News
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions