
சமீபத்தில் வெளியான விஜய்சேதுபதியின் 'நானும் ரெளடிதான்' சூப்பர் ஹிட் ஆகியுள்ள நிலையில் அவர் முன்னணி நடிகர்களின் வரிசையின் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி அவருக்கு முன்னணி இயக்குனர்களிடம் இருந்தும் படவாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றது.
ஏற்கனவே செல்வராகவனின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது தேசியவிருது பெற்ற இயக்குனர் சீனுராமசாமியின் அடுத்த படத்திலும் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே இவரது இயக்கத்தில் விஜய்சேதுபதி 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'தர்மதுரை' என்ற ரஜினி படத்தின் டைட்டில் இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்டுடியோ 9' நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Post your comment