விஜய்சேதுபதிக்கு குவியும் படவாய்ப்புகள்!

Bookmark and Share

விஜய்சேதுபதிக்கு குவியும் படவாய்ப்புகள்!

நானும் ரவுடிதான் பட வெற்றிக்குப் பிறகு விஜய்சேதுபதி மீண்டும் தனுஷ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்கவுள்ள நிலையில் இயக்குநர் சீனு ராமசாமியின் அடுத்தப் படத்திலும் நாயகனாக நடிக்கவுள்ளார்.

விஜய்சேதுபதி, விஷ்ணு, நந்திதா, ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடிப்பில் சீனு ராமசாமி இயக்கி வெளியீட்டிற்கு காத்திருக்கும் படம் “இடம்பொருள்ஏவல்”. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தப் படத்திற்கான பணிகளைத் தொடங்கிவிட்டார் சீனு ராமசாமி. இவரின்  அடுத்தப் படத்திலும் விஜய்சேதுபதியே நாயகனாக நடிக்கிறார். 

“தர்மதுரை” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சுகுமார் கவனிக்க, காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பு செய்யவிருக்கிறார். சலீம் படத்தைத் தயாரித்த ஸ்டுடியோ 9 புரெடக்‌ஷன் இப்படத்தையும் தயாரிக்கிறது. 

இப்படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கவிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதி போலீஸாக நடிக்கும் “ சேதுபதி படமும், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் “மெல்லிசை”, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “இறைவி”, நளன்குமாரசாமி இயக்கத்தில் “காதலும் கடந்துபோகும்” உள்ளிட்டப் படங்கள் வெளியீட்டிற்குத் தயாராகிவருகிறது.


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions