விஜய் சேதுபதிக்காக காட்டில் முகாமிட்டுள்ள இயக்குனர் கே.வி.ஆனந்த்!

Bookmark and Share

விஜய் சேதுபதிக்காக காட்டில் முகாமிட்டுள்ள இயக்குனர் கே.வி.ஆனந்த்!

‘அனேகன்’ படத்தை தொடர்ந்து கே.வி.ஆனந்த், விஜய் சேதுபதி, டி.ராஜேந்தரை வைத்து புதிய படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்தின் நாயகியாக மடோனா செபஸ்டியான் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

அதன் முதல்பணியாக தற்போது ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் இயக்குனர் கே.வி.ஆனந்த் ஈடுபட்டுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனத்தை கே.வி.ஆனந்துடன் இணைந்து எழுத்தாளர்கள் சுபா, கபிலன் வைரமுத்து ஆகியோர் எழுதுகின்றனர். 

எனவே, இவர்கள் நான்கு பேரும் சேர்ந்து திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை என்ற காட்டுப் பகுதியில் முகாமிட்டு, அங்கிருந்து கதையை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இது முடிந்தபிறகு ஜூலையில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விஜய் சேதுபதி தற்போது ‘ரெக்க’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மணிகண்டன் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இவரது நடிப்பில் ‘தர்மதுரை’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.  


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions