காதலும் கடந்து போகும் படத்தின் விளம்பர யுக்திக்கு எதிர்ப்பு

Bookmark and Share

காதலும் கடந்து போகும் படத்தின் விளம்பர யுக்திக்கு எதிர்ப்பு

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காதலும் கடந்து போகும்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த போஸ்டரில் ‘க க க போ’ விரைவில் என்று விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள். இதற்கு புதுமுக இயக்குனர் விஜய் கடும் ஆட்சேபம் தெரிவித்திருக்கிறார்.

இயக்குனர் விஜய் 'கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க' என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு 'க க க போ' என்று சுருக்கி தலைப்பிட்டு இருக்கிறார். இது குறித்து இயக்குனர் விஜய் கூறும்போது, "பெரும் வரவேற்பு பெற்ற வடிவேலுவின் வசனம் தான் 'க க க போ'.

எங்கள் படத்துக்கு சிறப்பு தலைப்பாக இருக்கும் என்று அதையே வைத்தோம். ஆனால் இப்போது நலன் தனது படத்துக்கும் இதே தலைப்பு வைத்திருப்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. நாங்கள் முதலிலேயே இந்த தலைப்பை சூட்டிவிட்டோம்.இது எங்களுக்கு வேதனையாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும், தனது படத்தின் தலைப்புக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் 'காதலும் கடந்து போகும்' விளம்பரப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions