விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் தலைப்புக்கு திடீர் சிக்கல்!

Bookmark and Share

விஜய் சேதுபதி நடிக்கும் படத்தின் தலைப்புக்கு திடீர் சிக்கல்!

விஜய் சேதுபதி, மடோனா செபஸ்டியன், சமுத்திரகனி  நடிப்பில் உருவாகியுள்ள படம் காதலும் கடந்துபோகும். படத்தை இயக்கியுள்ளார் நலன் குமாரசாமி.

இப்படத்தின் தலைப்பை சுருக்கி கககபோ என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மற்றும் டீஸரில் குறிப்பிட்டனர், தற்போது அந்த டைட்டிலுக்குதான் சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஏற்கனவே விஜய் என்பவர் இயக்கத்தில் கககபோ என்ற தலைப்பில் ஒரு படம் முடிந்து ரிலீஸ் தேதிகளுக்காகக் காத்திருக்கும் பச்சத்தில் விஜய்சேதுபதி படத்துக்கும் அதே பெயரை வைத்து குறிப்பிடுவதாக அப்படத்தின் இயக்குநர் மீடியாக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அக்கடித்தத்தில், அன்பு பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம், நான்  க க க  போ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளேன். இதில் பல்வேறு முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்து, திரைப்படம் முடிந்து தற்பொழுது வெளியீட்டிற்கு தயார்நிலையில் உள்ளது.

இன்னிலையில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் காதலும் கடந்து போகும் திரைப்படத்திற்கும் க க க  போ என பெயரிட்டு விளம்பரம் செய்கிறார்கள், இது எங்கள் திரைப்பட தலைப்பிற்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் உள்ளது.

எனவே பத்திரிகை நண்பர்கள் க க க போ தலைப்பு எங்களுக்கே சொந்தம் என்பதையும், இந்த தலைப்பில் குழப்பம் வராமல் செய்திகளை வெளியிடுமாறும் அன்போடு கேட்டுகொள்கிறோம். என எழுதியுள்ளார்.

கொஞ்சம் யோசித்தால் காதலும் கடந்து போகும் படத்தலைப்பில் இரண்டு க மட்டுமே உள்ளது என்ற நிலையில் மூன்றாவது க சேர்த்து கககபோ எனக் குறிப்பிடுவது தேவையா என்றே தோன்றுகிறது.

மேலும் படத்தின் தலைப்பும் சுத்தமான தமிழ்ப் பெயர் என்பதால். வரிச் சிக்கலுக்காக இரண்டு தலைப்புகளும் இங்கே தேவையில்லை என்றே தோன்றுகிறது.


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions