ரவுடி, போலீசை தொடர்ந்து டாக்டராக களம் இறங்கும் விஜய் சேதுபதி

Bookmark and Share

ரவுடி, போலீசை தொடர்ந்து டாக்டராக களம் இறங்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளிவந்து சூப்பர் ஹிட்டான படம் ‘நானும் ரவுடிதான்’. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். தனுஷ் தயாரித்த இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார்.

இதில் விஜய் சேதுபதி ரவுடியாக நடித்திருந்தார். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தை அடுத்து ‘சேதுபதி’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதில் போலீஸ் வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானது.

ரவுடியாக வந்து கலக்கிய விஜய் சேதுபதி போலீஸ் கெட்அப்பிலும் ரசிகர்களை வசப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படம் வெளியாகவுள்ளது.

ரவுடி, போலீஸ் கதாபாத்திரங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி தர்மதுரை என்ற படத்தில் டாக்டர் கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

சீனு ராமசாமி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமன்னா, ராதிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.


Post your comment





Related News
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.!
தந்தை கேட்டும் நடிக்க மறுத்த விஜய், உடனே விஜய் சேதுபதி செய்த செயல் - வெளிவந்த தகவல்.!
இவரா விஜய் சேதுபதியின் மகள்? முதல் முறையாக இணையத்தில் கசிந்த புகைப்படம்.!
சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி? - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
முன்னணி நடிகரின் படத்தில் கமிட்டான டப்மேஷ் மிருளானினி - வியப்பில் ரசிகர்கள்.!
என்ன மனுஷன் இந்த விஜய் சேதுபதி? - இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க.!
இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் விஜய் சேதுபதியின் கலக்கல் பேச்சு
சீதக்காதி படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக தேசிய விருது பெற்ற நாயகியா?
'தர்மதுரை ' வெற்றிக்குப் பிறகு ஆர்.கே.சுரேஷ் தயாரிக்கும் அடுத்த படம் 'புலிப்பாண்டி '








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions