நாங்களும் ஹீரோ தான், கலக்கும் விஜய் சேதுபதி

Bookmark and Share

நாங்களும் ஹீரோ தான், கலக்கும் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி ஆறடி உயரம், நல்ல நிறம் என எந்த ஒரு ஹீரோக்கான வரைமுறை இல்லாதவர். குணசித்திர நாயகனாக ஆனால், போதும் என்று தமிழ் சினிமாவின் கூத்து பட்டறையில் காலடி எடுத்து வைத்தவர்.

ஆனால், இன்று ஹேட்டர்ஸ் என்று ஒருவர் கூட இல்லாமல் இமாலய இடத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றார்.

இதற்கு பின் கடினமான உழைப்பு என்று கூறினாலும், கடினமாக உழைப்பவர்கள் எல்லாமே ஹீரோ ஆகவில்லை.

கொஞ்சம் சாமர்த்தியமாகவும் உழைக்க வேண்டும், அந்த வகை தான் விஜய் சேதுபதி, எடுத்ததுமே பன்ச் வசனம், பறந்து பறந்து அடிக்காமல், கதைக்கு என்ன தேவையோ அதை தான் வெளிப்படுத்தினார்.

நடித்த அனைத்து படங்களுமே ஹிட் என்ற நிலையில் இருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் தொடர் தோல்விகள், விஜய் சேதுபதி அவ்வளவு தான் என்று சொன்னார்கள்.

ஆனால், தன் வாழ்க்கையில் வெற்றி பெற்றது போலவே சினிமாவிலும் தொடர் முயற்சியால் கடந்த வருடம் மட்டுமே 4 ஹிட் படங்களை கொடுத்தார்.

இவரின் திரைப்பயணம் இதேபோல் என்றுமே தொடர விஜய் சேதுபதியின் பிறந்தநாளான இன்று சினிஉலகம் தன் வாழ்த்துக்களை கூறுகின்றது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions