இன்னும் சில வாரத்தில்... இடம் பொருள் ஏவல்.!

Bookmark and Share

இன்னும் சில வாரத்தில்... இடம் பொருள் ஏவல்.!

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கி வரும் படம் - இடம் பொருள் ஏவல். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் இன்னொரு ஹீரோவாக விஷ்ணு நடித்துள்ளார்.

மலைவாழ் மக்களின் வாழ்வியல் பற்றிப் பேசுகிற இப்படத்துக்கு இசைக்கு முக்கிய பங்கு உண்டு.எனவே யுவன்சங்கர்ராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்த சீனுராமசாமி, பாடல்வரிகள் மூலமும் படத்துக்கு வலிமை சேர்க்க வைரமுத்துவை நாடினார்.

இளையராஜா உடனான பகை காரணமாக யுவன்சங்கர்ராஜா இசையில் பாடல் எழுதத்தயங்கிய வைரமுத்துவை சமாதானப்படுத்தி சம்மதிக்கவும் வைத்தார் சீனுராமசாமி.சில மாதங்களுக்கு முன் இடம் பொருள் ஏவல் படத்தின் இசை வெளியிடப்பட்டது.

அடுத்தடுத்த வாரத்தில் படமும் வெளியாகும் என எதிர்பார்த்த நேரத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பொருளாதாரப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டது.அதன் காரணமாக இடம் பொருள் ஏவல் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

தயாரிப்பாளர் லிங்குசாமிக்கு ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை புரிந்து கொண்டு தன்னுடைய சம்பள பாக்கி 50 லட்சத்தை விட்டுக் கொடுத்தார் விஜய்சேதுபதி.அவர் செய்த உதவிக்குப் பிறகு இடம்பொருள் ஏவல் படத்தின் வேலைகள் மளமளவென நடைபெற ஆரம்பித்தன.

சில தினங்களுக்கு முன் இடம்பொருள் ஏவல் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகள் நிறைவடைந்துள்ளன. இன்னும் சில வாரத்தில் வெள்ளித்திரைக்கு வரத் தயாராகிவிட்டது - இடம் பொருள் ஏவல்.

 


Post your comment





Related News
விரைவில் வெளியாகும் இடம் பொருள் ஏவல்!
விஜய்சேதுபதி பேசாத பாத்திரம்!
இன்னும் சில வாரங்களில் இடம்பொருள் ஏவல்
இடம்பொருள் ஏவலைத் தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய்!
76 நாட்களில்... 6.5 கோடி பட்ஜெட்டில்... இடம் பொருள் ஏவல்!
இடம் பொருள் ஏவல் படத்தின் டிரைலர் ஏப்ரல் 23ம் தேதி வெளியீடு
மே மாதத்துக்கு சென்ற இடம் பொருள் ஏவல், இந்தியா பாகிஸ்தான்!
இடம் பொருள் ஏவல் படத்தில் பொட்டு சுரேஷ்!?
தொடங்கியது இடம் பொருள் ஏவலின் டப்பிங் பணிகள்
இசை வெளியாகியும், வெளியாகாத படங்கள்...!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions