தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!

Bookmark and Share

தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!

தனது எளிய நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர், ’மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி. இவரது படத்தில் பஞ்ச் வசனங்கள் இருக்காது, பத்து பேரை சுழற்றி சுழற்றி அடிப்பது போன்ற காட்சிகள் ஏதும் இருக்காது. ஆனால் தற்போதைய நிலவரப்படி இவர் இப்போது மாஸ் ஹீரோ.

இப்படிப்பட்ட இவரின் நடிப்பில் ஜுங்கா என்ற படம் திரைக்குவர இருக்கும் நிலையில், அடுத்த படத்திற்கான அப்டேட் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் இவர் ஏற்கனவே நடித்திருந்த பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கியிருந்த அருண் குமாரின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். யுவனின் YSR films மற்றும் K productions நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் படப்பிடிப்பு முதல் கட்டமாக தென்காசியிலும் இரண்டாம் கட்டமாக தாய்லாந்திலும் நடைபெற்று வருகிறது.

மேலும் விஜய் சேதுபதி தனது ஆரம்பகால படமான தென்மேற்கு பருவக் காற்றிலும் கிராமத்து இளைஞராக மண்வாசனையுடன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு லைகா நிறுவனம் ரூ.1 கோடி நிதியுதவி
ஸ்ரீ க்ரீன் புரோடக்ஷன்ஸ் M.S.சரவணன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் "அடங்காதே" - டப்பிங் இன்று துவங்கியது
ஆகஸ்ட் 17-ல் கோலமாவு கோகிலா - படக்குழுவினர் உறுதி.!
விஜய் 63 இயக்குனர் இவர்தான்? தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிம்பு- வெங்கட் பிரபு கூட்டணியின் "மாநாடு"!!!
பேஸ் புக் டீவீட்டை கண்டு மிரண்டு போன மாபெரும் தயாரிப்பு நிறுவனம் - அப்படி என்ன ட்வீட் தெரியுமா?
ரஜினி படத்தில் மலையாள வில்லன்
லைக்கா ஞானம் அறக்கட்டளைக்கும் இணை நிறுவுனர் திருமதி ஞானாம்பிகை அல்லிராஜாவுக்கும் ஐ.நா இல் அதியுயர் விருது!
'லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் எந்திரன் 2.. உறுதி செய்த அய்ங்கரன் கருணா!
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்து ஜி.வி.பிரகாஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions