விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்?

Bookmark and Share

விஜய் சேதுபதியுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்?

விஜய் சேதுபதி நடிப்பில் ‘சேதுபதி’, ‘காதலும் கடந்து போகும்’, ‘இடம் பொருள் ஏவல்’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.

மேலும் ‘மெல்லிசை’, ‘இறைவி’, ‘தர்மதுரை’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. அத்துடன் காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்திலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

இந்நிலையில், இவர் அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்த புதிய படத்திற்கு ‘ரெக்கை’ என பெயர் வைத்திருக்கின்றனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

ஆக்‌ஷன் கலந்த காதல் கதையாக உருவாக இருக்கும் இப்படத்தை கணேஷ் தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதி நடித்த ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்தவர்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions