விஜய் சேதுபதி செய்வது நியாயமா?

Bookmark and Share

விஜய் சேதுபதி செய்வது நியாயமா?

விஜய் சேதுபதி நடித்துள்ள இரண்டு படங்கள் தற்போது வெளியீட்டுக்குத் தயாராக உள்ளன. ஒரு படம் இடம் பொருள் ஏவல் மற்றொன்று விஜய் சேதுபதியின் சொந்தத் தயாரிப்பான ஆரஞ்சு மிட்டாய் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இடம் பொருள் ஏவல் படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய படம். 

இந்தப் படத்தைத் தயாரித்துள்ள திருப்பதி பிரதர்ஸ் பெரும் பணக் கஷ்டத்தில் சிக்கியதால் அவர்கள் கமல்ஹாசனை வைத்துத் தயாரித்த உத்தம வில்லன் படத்தையே சொன்னபடி வெளியிட முடியாமல் போனது. 

அவர்கள் தயாரித்துள்ள மற்றொரு படமான ரஜினி முருகன் படத்தின் வெளியீட்டுத் தேதியையும் இன்னும் முறைப்படி அறிவிக்காமலே இருக்கிறார்கள். இடம் பொருள் ஏவல் படத்தை ஜுலை மாதம் வெளியிடப் போவதாக கடந்த சில வாரங்களாகவே அறிவித்து வருகிறார்கள். ஆனால், இன்னும் எந்தத் தேதியில் அந்தப் படம் வெளியாகும் என்று தெரிவிக்கவில்லை. இதனிடையே ஜிகினா என்ற படத்தையும் ஜுலை மாதம் வெளியிடப் போவதாக சொல்லியிருந்தார்கள். 

ஒரே மாதத்தில் எப்படி இப்படி அடுத்தடுத்து மூன்று படங்களை வெளியிட முடியும் என கோலிவுட் வட்டாரத்தில் எழுப்புகிறார்கள். அதனால், விஜய் சேதுபதி தானே சொந்தமாகத் தயாரித்து நாயகனாக நடித்துள்ள ஆரஞ்சு மிட்டாய் படத்தை ஜுலை 31ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துவிட்டார். இதனால் இடம் பொருள் ஏவல் படத்திற்குத்தான் சிக்கல் எழுந்துள்ளது. 

தனக்கு தமிழ் சினிமாவில் சரியான ஏற்றத்தை ஏற்படுத்தி வைத்த சீனு ராமசாமி இயக்கத்தில் அவர் நடித்த இடம் பொருள் ஏவல் படத்தைப் பற்றி விஜய் சேதுபதி கவலைப்படாமல் சொந்தப் படத்தை திடீரென வெளியிடுவதை திரையுலகத்தினரே ஆச்சரியத்தில் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவில் இதெல்லாம் சகஜம்தானே என்றும் அவர்களே அடுத்து பதிலளிக்கிறார்கள்.


Post your comment





Related News
ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை இதுதான்
தாமதமாகும் விஜய்சேதுபதி படங்கள்...!
பஞ்சுமிட்டாய் - ஒரு முழுமையான விஜய் படம்
ஆரஞ்சு மிட்டாய் படத்துக்காக பின்னணி பாடுகிறார் விஜயசேதுபதி!
24 மணி நேரத்துக்குள் 2.40 லட்சம் ஹிட்ஸ்! ஆரஞ்சு மிட்டாய் சாதனை!
ஆரஞ்சு மிட்டாய் ட்ரெய்லர் - விஜய் சேதுபதியை நினைத்து பெருமைப்படும் தனுஷ்
விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
டிசம்பரில் திரைக்கு வரும் விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய்
விஜய் சேதுபதி படத்தை இயக்கும் உலகப் புகழ்பெற்ற இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions