விஜய் சேதுபதியுடன் நடித்தவருக்கு படப்பிடிப்பில் நடந்த விபத்து! சோகம்

Bookmark and Share

விஜய் சேதுபதியுடன் நடித்தவருக்கு படப்பிடிப்பில் நடந்த விபத்து! சோகம்

விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் டேன்சராக நடித்தவர் ஆர்.கே.சுரேஷ். இவரே அப்படத்தையும் தயாரித்திருந்தார்.

விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தை தயாரித்த ஆர்.கே.சுரேஷ், இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' க்குப் பின் வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார் .

இதுவரை வில்லனாக நடித்த அவர் இப்போது தனி நாயகனாக தனி முகம், பில்லா பாண்டி, வேட்டை நாய் ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.

ஜெய்சங்கர் இயக்கத்தில் வேட்டை நாய் படத்தில் ஹீரோவாக சுரேஷ் நடிக்க, நாயகியாக 'கடுகு' படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார்.

ராம்கி, வாணி விஸ்வநாத், தம்பி ராமையா, சரவண சக்தி, 'என் உயிர்த் தோழன்’ ரமா ஆகியோரும் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு மதுரை பெரியகுளம் பகுதியில் நடைபெற்றது.

ஹீரோ, வில்லன் ஆகிய இருவரும் மோதிக் கொள்வது போல சண்டைக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. அடுப்பில் பானைகளை வைத்து தீ எரிவது போன்ற இடத்தில் படமானது.

சண்டைக் காட்சி படமான போது அடுப்பில் சரிந்து விழுந்த ஆர்.கே.சுரேஷ் மீது வெந்நீர் பானை விழுந்து வெந்நீர் கொட்டித் தீக் காயங்கள் ஏற்பட்டன.

உடனடியாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு மதுரை கொண்டு செல்லப் பட்டார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Post your comment





Related News
காதலரை மணந்தார் பாவனா - நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே பங்கேற்பு
மீண்டும் சுசி லீக்ஸ் - ஆபாச ‘வீடியோ’ வெளியாவதால் நடிகைகள் கலக்கம்
“நடிகைகளை திருமணம் செய்து கொள்ள ஏன் தயங்குகிறார்கள்” - நடிகை நமீதா வேதனை
மீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
"மோகினி" திரைப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டே உருவாகியுள்ளது. - இயக்குனர் R. மாதேஷ்
நடிக்க வாய்ப்பு தருவதாக பாலியல் தொல்லை - பட அதிபர் மீது சுருதி ஹரிகரன் புகார்
ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் நியமனம்
படப்பிடிப்பின் போது மயங்கி விழுந்த இயக்குநர் மகேந்திரன்
‘நாச்சியார்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions