ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் 2 படங்கள்!

Bookmark and Share

ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் 2 படங்கள்!

‘சூது கவ்வும்’ படத்தை இயக்கிய நலன்குமாரசாமி இயக்கியுள்ள படம் ‘காதலும் கடந்து போகும்’. விஜய் சேதுபதி நடித்துள்ள இந்த படம் காதலர் தினத்தையொட்டி வருகிற 12–ந் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இதுதவிர விஜய்சேதுபதி – ரம்யா நம்பீசன் நடித்த ‘சேதுபதி’ படமும் திரைக்கு வர தயாராக இருக்கிறது. இந்த படத்தை 19–ந் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதனால் ஒரே மாதத்தில் ஒருவார இடைவெளிக்குள் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

‘காதலும் கடந்து போகும்‘ படம் ரொமான்ஸ் கலந்த நகைச்சுவை படமாக உருவாகியிருக்கிறது. ‘சேதுபதி’ படம் சென்டிமெண்ட் ஆக்ஷன் கலந்து உருவாக்கப்பட்டள்ளது. ‘நானும் ரௌடிதான்’ வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதி படங்கள் வெளியாவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions