விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்கும் – இயக்குனர் நம்பிக்கை!

Bookmark and Share

விஜய் சேதுபதிக்கு தேசிய விருது கிடைக்கும் – இயக்குனர் நம்பிக்கை!

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் தர்மதுரை. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

இப்படத்தில் விஜய் சேதுபதி டாக்டராக நடித்துள்ளார். அவரது அம்மாவாக ராதிகா சரத்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்ததற்காக இவர்கள் இருவருக்கும் தேசிய விருது கிடைக்கும் என இயக்குனர் சீனு ராமசாமி தற்போது நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக தமன்னா, ஸ்ருஷ்டி டாங்கே, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளிவரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வைரமுத்து வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

 


Post your comment





Related News
வைரலாகும் பிரபல நடிகரின் நியூவ் கெட்டப் புகைப்படம் - வாய் பிளக்கும் ரசிகர்கள்.!
"சின்ன தல"... சிம்பு- விஜய் சேதுபதி ரசிகர்களிடையே சிறு மோதல்!
ஒரே மாதத்தில் ரிலீஸ் ஆகும் விஜய்சேதுபதியின் 2 படங்கள்!
நட்சத்திர ஓட்டலில் விஜய்சேதுபதி - நந்திதா..!
விஜய்சேதுபதி ஜோடியாக, \"மனிஷா\"விற்குப் பதில் \"நந்திதா\"..!
காதல் காமெடி ரெண்டும் பிடிக்கும்: நந்திதா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions