போலீஸ் வேடத்தில் நடிக்க பயந்தாரா விஜய்சேதுபதி!

Bookmark and Share

போலீஸ் வேடத்தில் நடிக்க பயந்தாரா விஜய்சேதுபதி!

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு மெல்லிசை, இடம் பொருள் ஏவல் படங்களை முடித்த விஜயசேதுபதி இறைவி, சேதுபதி, காதலும் கடந்து போகும், தர்மதுரை ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதற்கிடையே அவருக்காக ஆண்டவன் கட்டளை என்ற கதையை ரெடி பண்ணி வைத்துக்கொண்டு கால்சீட்டுக்காக காத்திருக்கிறார் காக்கா முட்டை மணிகண்டன்.மேலும், சேதுபதி படத்தில் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஜயசேதுபதி.

இதற்கு முன்பு காதல், காமெடி என்று ஜாலியான கதைகளாக நடித்துள்ள அவருக்கு காக்கி சட்டை அணிந்து நடிக்க வேண்டும் என்றதும் பயம் வந்து விட்டதாம்.

அதோடு, அந்த வேடமும், அந்த யூனிபாமும் நமக்கு பொருத்தமாக இருக்குமா? என்று பெரிய குழப்பத்தில்தான் இருந்தாராம்.ஆனால், அந்த படத்துக்கான ஆடிசன் நடந்தபோது முதன்முறையாக காக்கி சட்டை அணிந்து ஆள் உயர கண்ணாடி முன்பு நின்றபோது தன்னைப்பார்த்து ஆச்சர்யப்பட்டாராம் விஜயசேதுபதி.

காரணம், அந்த உடையில் அவரது தோற்றம் அத்தனை கம்பீரமாக தெரிந்ததாம். அதன்பிறகுதான் நமக்கும் போலீஸ் வேடம் பொருத்தமாக இருக்கும் போலிருக்கே என்ற முடிவுக்கு வந்த விஜயசேதுபதியின் பயம் காணாமல் போனதாம்.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions