கடைசி நேரத்தில் வர மறுத்த விக்ரம் : கொந்தளித்த ரசிகர்கள்

Bookmark and Share

கடைசி நேரத்தில் வர மறுத்த விக்ரம் : கொந்தளித்த ரசிகர்கள்

இந்தப் படத்தில் எந்த விலங்குகளும் துன்புறுத்தப்படவில்லை விக்ரமைத் தவிர என்று ஃபேஸ்புக்கில் நக்கல் செய்கிற அளவுக்கு ஐ படத்துக்காக தன் உடலை வருத்திக் கொள்பவர் நடிகர் விக்ரம் அவர் செய்த அந்த உடல் வருத்தம் பலருக்கும் வருத்தம் தான்.

இதோட நிறுத்திக்கங்க.., இதுக்கு மேல உங்க உடம்பை இயற்கைக்கு மாறா ஏதாவது செய்ய நெனைச்சா நெலைமை ரொம்ப சீரியஸாயிடும் என்று டாக்டர்களே அவரை எச்சரித்து விட்டுப் போயிருக்கிறார்கள்.

அந்தளவுக்கு படத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். அதனால் தான் எவ்வளவு இடைவெளி விட்டு அவருடைய படம் ரிலீசானாலும் தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அள்ளுகிறது.

அப்படிப்பட்ட பாசக்கார ரசிகர்களையே சந்திக்க மறுத்து கடைசி நேரத்தில் கழுத்தறுத்த சம்பவம் அனேகன் படத்தில் காட்டுவார்களே அதே பர்மாவில் நடந்தேறியிருக்கிறது.

அங்கு தமிழ் அமைப்பு ஒன்றின் சார்பில் ஒரு நிகழ்ச்சிக்காக விக்ரமை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்காக அவரை நேரில் சந்தித்து அனுமதி கேட்டபோது நான் கண்டிப்பாக வருவேன் என்று உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் விக்ரம். அதன்பிறகு தான் அந்த நிகழ்ச்சிக்கான நுழைவுச்சீட்டு சேல்ஸ் வேலையே களைகட்டியிருக்கிறது. வருவது விக்ரம் என்பதால் கிட்டத்தட்ட 90 சதவீத டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாம்.

நாளை விழா என்றால் முன்தினமான இன்று விழாக்குழுவினர் நிகழ்ச்சியை போன் செய்து நினைவுபடுத்த ஸாரி, என்னால வர முடியல என்று ஒற்றை வரியில் சொல்லி அதிர்ச்சி கொடுத்தாராம் விக்ரம்.

அவ்வளவு தான் பதறிப்போனார்கள் விழாக்குழுவினர். எவ்வளவோ கெஞ்சுப் பார்த்தும் முடியவே முடியாது என்று பிடிவாதம் காட்ட கடைசி நேரத்தில் வேறு யாராவது திரையுலக பிரபலம் கிடைப்பார்களா? என்று அலைந்திருக்கிறார்கள் விழாக்குழுவினர். கிடைத்தது என்னமோ ஏமாற்றம் தான்.

இதனால் நிகழ்ச்சிக்கான டிக்கெட் காசை திருப்பிக் கொடுத்ததோடு விக்ரமின் பொறுப்பற்ற செயலை ரசிகர்களிடம் சொல்லி குமுறியிருக்கிறார்கள். விக்ரம் மீது கடுமையான கொந்தளிப்பில் இருக்கிறார்கள் பர்மாவில் உள்ள ரசிகர்கள்!


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions