வீரப்பன் மீசையுடன் விக்ரமின் புதிய கெட்டப்

Bookmark and Share

வீரப்பன் மீசையுடன் விக்ரமின் புதிய கெட்டப்

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள புதிய படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இப்படத்தில் விக்ரம் டாக்சி டிரைவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ‘கோலி சோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் விக்ரம், சமந்தா, இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு விக்ரம், வீரப்பன் மீசையுடன் கலந்துகொண்டார்.

இந்த மீசை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அவர் எந்த பதிலும் கூற மறுத்துவிட்டார். படத்திற்கு படம் தனது தோற்றத்தில் வித்தியாசம் காட்டும் விக்ரம், எந்த படத்திற்காக இந்த தோற்றத்தில் நடிக்கவிருக்கிறார் என்பது மர்மமாகவே இருக்கிறது.

இருப்பினும், விக்ரம், ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தை தொடர்ந்து ‘அரிமா நம்பி’ இயக்குனர் இயக்கும் ‘மர்ம மனிதன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்காகத்தான் விக்ரம் இந்த புதிய கெட்டப்பில் வருவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இருப்பினும், எந்த படத்திற்காக, இவர் இந்த கெட்டப்பில் இருக்கிறார் என்பது கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. 


Post your comment





Related News
சீயானை பின்னுக்கு தள்ளிய விஜய்!
”10 எண்றதுக்குள்ள”.படத்தில் புகை பிடிக்கும் சமந்தா !
சமந்தா வின் தாய்மாமா கொலையில் மர்மம்?
10 எண்றதுக்குள்ள வசூல் சர்ச்சை: தனுஷ் விளக்கம்
ஜெர்மனி மருத்துவரை அதிர்ச்சியடைய வைத்த விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்
காதல் மனைவியை சந்தித்த அந்த தருணம்..! மனம் திறந்த விக்ரம்
முதல் நாளில் 6.5 கோடியை வசூலை குவித்த 10 எண்றதுக்குள்ள!
பத்து எண்றதுக்குள்ள படத்திற்கு ஒரே நாளில் 1000 காட்சிகள் : உற்சாகத்தில் ரசிகர்கள்!
மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விக்ரம்!
ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions