ஜெர்மனி மருத்துவரை அதிர்ச்சியடைய வைத்த விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்

Bookmark and Share

ஜெர்மனி மருத்துவரை அதிர்ச்சியடைய வைத்த விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்

நடிகர் விக்ரம் பல ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி மூன்று ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தார்.

அவரால் எழுந்து நடக்கவே முடியாது என்று நினைத்தபோது தனது மனதைரியத்தால் நடக்கத்துவங்கினார். அதுமட்டுமா படங்களில் டான்ஸும் ஆடி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

விக்ரமின் ஸ்கேன் ரிப்போர்ட்டை அண்மையில் ஜெர்மனியைச் சேர்ந்த முழங்கால் சிகிச்சை நிபுணருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஸ்கேனை பார்த்த டாக்டர் மிரண்டுவிட்டாராம்.
ஸ்கேனை பார்த்த டாக்டர், அந்த நபர் நன்றாக நடப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுள்ளார். அந்த நபர் விக்ரம் என்றும் அவர் நடப்பதோடு மட்டும் அல்லாமல் படங்களில் நடித்து வருவதையும் அறிந்து அவரால் தனது வியப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லையாம்.

”சக்கர நாற்காலியில் இருக்க வேண்டிய ஒருவர் எப்படி நடக்கிறார். என் மருத்துவமனைக்கு நடந்து வந்துள்ளார்” என்று டாக்டரால் அவரது கண்ணையே நம்ப முடியவில்லையாம்.

3 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்த விக்ரம் எழுந்து நடந்ததற்கு அவரது தன்னம்பிக்கை மட்டும் தான் காரணம் என்று அப்போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
காதல் மனைவியை சந்தித்த அந்த தருணம்..! மனம் திறந்த விக்ரம்
மீண்டும் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் விக்ரம்!
ஒரேநாளில் மோதும் விக்ரம், டார்லிங் 2
விஜய்யை வைத்து புரோமோஷன் தேடிக்கொண்ட விக்ரம்
அவசரத்துக்கு பணம் திருடி மாட்டிக் கொண்ட விக்ரம்
வீரப்பன் மீசையுடன் விக்ரமின் புதிய கெட்டப்
காந்தி ஜெயந்தியன்று வெளியாகும் விக்ரம் படம்?
பல்கேரியா ரெயிலில் சண்டை போடும் விக்ரம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions