விக்ரம் உடன் மோத முடிவெடுத்த தனுஷ்!

Bookmark and Share

விக்ரம் உடன் மோத முடிவெடுத்த தனுஷ்!

கோலிசோடா வெற்றிப்படத்தை இயக்கிய விஜய்மில்டன் அடுத்து விக்ரம் நடிக்கும் 10 எண்றதுக்குள்ள படத்தை இயக்கி வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் நடித்த விக்ரம் அப்படத்துக்காக வருடக்கணக்கில் கால்ஷீட் கொடுத்து நடித்தார்.

எனவே அடுத்து நடிக்கும் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் 10 எண்றதுக்குள்ள படத்தில் நடிக்கவே ஒப்புக்கொண்டார். ஆனால் அவர் நினைத்ததற்கு மாறாக இந்தப்படமும் நீண்டகால தயாரிப்பாக மாறிவிட்டது.

10 எண்றதுக்குள்ள படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்க ஆரம்பித்ததும் இயக்குநரும் ஹீரோவும் பேசிப்பேசி படத்தை பிரம்மாண்டமாக்கிவிட்டனர். செலவும் எகிற... படப்பிடிப்பு நாட்களும் அதிகரித்துவிட்டன.

இந்நிலையில் காந்தி ஜெயந்தி அன்று 10 எண்றதுக்குள்ள படத்தை வெளியிட இருப்பதாக கூறி வந்தனர். இப்படத்தில் சம்மந்தப்பட்டவர்களும் அவ்வப்போது ட்விட்டரில் இந்த தகவலை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக தனுஷ் தற்போது நடித்து வரும் விஐபி -2 படத்தையும் காந்தி ஜெயந்தி அன்று வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர். இந்த தகவல் விக்ரம், விஜய்மில்டன் ஆகியோரை அதிர்ச்சியடைய வைத்துள்ளதாம். இருக்காதா பின்னே?


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions