ஹிட்டுக்காக கடுமையாக உழைக்கும் விக்ரம்!

Bookmark and Share

ஹிட்டுக்காக கடுமையாக உழைக்கும் விக்ரம்!

ஒரு படத்துக்காக தன்னை எந்த அளவுக்கு வருத்திக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்கு வருத்தி நடிப்பவர்தான் விக்ரம். உதாரணத்திற்கு சேது, காசி, அந்நியன், ஐ என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

அதிலும் ஐ படத்தில் அவரது உழைப்பு ரொம்ப கடுமையானது. கோலிவுட் திரையுலகம் மட்டுமின்றி, பாலிவுட், ஹாலிவுட் திரையுலகினரே அவர் தன்னை அடையாளமே தெரியாத அளவுக்கு உருமாற்றிக்கொண்டு நடித்ததை வியப்புடன் குறிப்பிட்டனர்.

அப்படிப்பட்ட விக்ரம், ஐ படத்தை அடுத்து தற்போது பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மாஸ் ஹீரோக்கள் போன்ற கதையில் நடிக்கும் அவர், இந்த படம் கமர்சியல் ரீதியாக மெகா ஹிட்டாக வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.

அதனால், ஒவ்வொரு காட்சியையுமே இன்றைக்கு நடித்து முடித்து விட்டு வீட்டிற்கு சென்று யோசிப்பவர், அது தனக்கு திருப்தியாக படவில்லை என்றால், மறுநாள் வந்து அதே காட்சியை மீண்டும் நடிக்கிறாராம்.

இப்படி பல முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை திரும்பத்திரும்ப விக்ரம் நடிப்பதால்தான், படப்பிடிப்பு இன்னும் முடியாமல் இழுத்துக்கொண்டேயிருக்கிறதாம். அதோடு, ஏற்கனவே போட்டதை விடவும் பட்ஜெட் எகிறி நிற்கிறதாம். இருப்பினும், படம் நன்றாக வந்திருப்பதால், அப்படக்குழுவினர் உற்சாகமாகவே காணப்படுகின்றனர்.


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions