இந்த ஒரு விஷயத்திற்காக அத்தனை கிலோ மீட்டர் நடப்பார் விக்ரம்- இது தான் அர்ப்பணிப்பு

Bookmark and Share

இந்த ஒரு விஷயத்திற்காக அத்தனை கிலோ மீட்டர் நடப்பார் விக்ரம்- இது தான் அர்ப்பணிப்பு

சினிமாவில் காலடி எடுத்த வைப்பவர்கள் பலரும் என்றாவது நமக்கு வெற்றி வந்துவிடாதா என்று தான் போராடி வருகிறார்கள். ஒரு சிலருக்கு எளிதில் கிடைக்கும், ஒரு சிலருக்கு அது எட்டா கனியாகவே இருக்கும்.

அந்த வகையில் திரைத்துரைக்கு பின்னால், அப்பாஸ், அஜித் ஏன் ஜுனியர் ஆர்டிஸ்ட் முதற்கொண்டு குரல் கொடுத்து வந்தவர் விக்ரம்.

தொடர் 20 படங்கள் தோல்வி, சினிமாவில் இதன் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் இவர் பார்க்காத வேலைகளே இல்லை.

மனதில் பலம் இருந்தாலும், ஒரு பெரிய விபத்து உடலில் உள்ள பலத்தை விக்ரமிடம் இருந்து குறைத்தது. காலில் ஏற்பட்ட விபத்தால் விக்ரம் 3 வருடம் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத தருணம்.

அப்போது தான் அவர் வீட்டு காலிங் பெல்லை பாலா அடித்தார், விக்ரமை சேதுவாக மாற்ற, விக்ரமும் இதற்கு மேல் என்னிடம் ஏதும் இல்லை என்பது போல் அத்தனை அர்பணிப்புடன் நடித்துக்கொடுத்தார்.

இந்த படத்தில் விக்ரம் மெலிந்து, கருத்த தேகத்துடன் இருக்க வேண்டும் என பாலா கூற, அதனால் தினமும் படப்பிடிப்பு தளத்திற்கு 5 கிலோமீட்டருக்கு மேல் நடந்தே வருவராம்.

இதை பாலாவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார், சேது வெளிவந்து விக்ரமை ஒரு நடிகனாக மக்கள் ஏற்றுக்கொள்ள, அதன் பிறகும் காசி, பிதாமகன், அந்நியன், ராவணன், தெயவத்திருமகன், ஐ என படத்திற்காக தன்னை உருமாற்றி, உருமாற்றி அர்பணித்து வருகின்றார்.

இவரின் அர்பணிப்பிற்கு தான் தமிழ் சினிமா ரசிகர்களில் ஒருவர் கூட எனக்கு விக்ரமை பிடிக்காது என்று கூறமாட்டார்கள்.

விஜய், அஜித், ரஜினி, கமல் என அனைத்து தரப்பு நடிகர்களுக்கும் இவர் பேவரட் தான், சீயானின் உழைப்பும், உயர்வும் இன்று போல் என்றும் உயர சினி உலகம் இவரின் பிறந்தநாளான இன்று தன் வாழ்த்துக்களை கூறுகின்றது.


Post your comment





Related News
மகனுக்கு ஏற்ற பெண்ணை தேடும் விக்ரம்
பாலா - துருவ் விக்ரம் இணையும் படத்தின் தலைப்பு
ஒரே நேரத்தில் தல தளபதி படத்திற்கு இசையமைக்கும் பிரபலம் - யார் அவர் தெரியுமா?
விக்ரம் - சூர்யா படங்கள் மோதலா?
திடீரென நடந்த நடிகர் விக்ரம் மகள் திருமணம்- காரணம் என்ன
விவேக்கிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விக்ரம்
சாமி-2 படத்தில் இருந்து திடீரென விலகிய திரிஷா - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
`அர்ஜுன் ரெட்டி' படத்தில் துருவ் ஜோடியாகும் குழந்தை நட்சத்திரம்
தோனி ரசிகராக விக்ரம் பிரபு நடிக்கும் “ பக்கா “
ஸ்கெட்ச் படத்தில் இத்தனை வில்லன்களா? - படக்குழுவினரே சொன்ன தகவல்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions