உடலை வருத்துவதை குறைக்க விக்ரம் முடிவு?!

Bookmark and Share

உடலை வருத்துவதை குறைக்க விக்ரம் முடிவு?!

சீயான் விக்ரம் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோதே, டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்துள்ளார். அதோடு, சினிமா மற்றும் டிவி சீரியல்களில் சிறிய வேடங்களிலும் நடித்து வந்தவர், அந்த காலட்டத்தில் மேடை நாடகங்களிலும் நடித்து வந்திருக்கிறார்.

அப்போது ஒருமுறை நாடகத்திற்காக வெளியூர் சென்றபோது, ஒரு விபத்து ஏற்பட்டு, சென்னையிலுள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தார்களாம்.

அப்போது, விக்ரமுக்கு சிகிச்சை கொடுத்த டாக்டர்கள், ஒரு காலை எடுத்தே ஆக வேண்டும் என்று கூறிவிட்டார்களாம்.இதனால் பலத்த அதிர்ச்சியடைந்த விக்ரமின் அம்மா மகன் உயிர் பிழைத்தாலே போதும் என்று அதற்கு சம்மதம் சொல்லி விட்டாராம். ஆனால் அவரது தந்தையோ, உடனடியாக அங்கிருந்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்து விக்ரமின் காலை எடுக்காமலேயே அவருக்கு சிகிச்சை அளித்திருக்கிறார்.

அதன்காரணமாக, 3 வருடங்கள் நடக்காமல் பெட்டில் இருந்த விக்ரம், பின்னர் படிப்படியாக நடக்கத் தொடங்கியிருக்கிறார். அதோடு நீச்சல், கராத்தே, உடற்பயிற்சி செய்து தன்னை தயார்படுத்தியிருக்கிறார் விக்ரம்.

ஆனால் அதன்பிறகு அவரது காலில் எந்த பிரச்னையும் இல்லை என்றபோதும், ஐ படத்துக்காக ரயில் சண்டை காட்சியில் நடித்தபோது தனது காலில் மீண்டும் வலியை உணர்ந்தாராம் விக்ரம். அதனால் இனிமேல் நடிப்புக்காக உடலை அதிகமாக வருத்துவதில்லை என்றும் அவர் முடிவு செய்திருக்கிறாராம்.


Post your comment





Related News
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions