விக்ரம் படத்தில் பிரம்மாண்ட சுரங்க சண்டைக்காட்சி!

Bookmark and Share

விக்ரம் படத்தில் பிரம்மாண்ட சுரங்க சண்டைக்காட்சி!

விக்ரம் தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் ‘இருமுகன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா, நித்யா மேனன் என இரண்டு கதாநாயகிகள் நடித்து வருகின்றனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வரும் இப்படத்துக்கு ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

மலேசியாவில் விறுவிறுப்பாக நடந்து வந்த முதல் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது 2-ம் கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வருகிறார்கள்.

இதில் பிரம்மாண்டமான சண்டைக்காட்சி ஒன்றை எடுத்து வருகின்றனர். இதற்காக சுரங்கம் போன்ற செட் ஒன்று அமைத்து அதற்குள் படமாக்கி வருகிறார்கள்.

சுரங்க அரங்கினை 'க்ரிஷ் 3' படத்துக்கு கலை இயக்குனராக பணியாற்றிய சுரேஷ் செல்வராஜ் அமைத்திருக்கிறார். சண்டை வடிவமைப்பை 'ஜெய் ஹோ' படத்துக்கு சண்டை வடிவமைப்பாளராக பணியாற்றிய ரவி வர்மா அமைத்து வருகிறார்.

தமிழ் திரையுலகில் இதுவரை யாருமே இவ்வளவு பெரிய சுரங்கம் அரங்கு அமைத்து காட்சிகளை படமாக்கியது இல்லை என்று படக்குழுவினர் கூறுகிறார்கள். ஜூன் மாதத்திற்குள் மொத்த படப்பிடிப்பையும் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

 


Post your comment





Related News
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions