வீணாகப் போகாது விக்ரமின் உழைப்பு

Bookmark and Share

வீணாகப் போகாது விக்ரமின் உழைப்பு

ஷங்கர் இயக்கத்தில் உருவான ஐ படத்தில் விக்ரம் மிகவும் சிரமப்பட்டு நடித்திருந்தார். பாடி பில்டர் ஆகவும், உடல் மெலிந்து போன கூனன் ஆகவும் இரண்டு மாறுபட்ட தோற்றத்தில் ஒரே படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்திற்காக 100 கிலோவுக்கும் மேல் உடலை ஏற்றிய விக்ரம், 40 கிலோவுக்கும் உடலை குறைத்தும் நடித்திருக்கிறார். இந்தியத் திரையுலகில், ஏன் ஹாலிவுட் திரையுலகில் கூட இப்படி யாரும் செய்திருப்பார்களா என்பது சந்தேகமே.

கடந்த சில நாட்களாக ஐ படத்திற்காக கூனன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கும் போது அவருக்காக போடப்பட்ட மேக்கப் புகைப்படங்கள் சில வெளியாகியிருந்தன. அதில் நிற்பதற்கே ஒரு ஊன்றுகோலான துணையுடன் விக்ரம் நிற்பதும் அதில் அவர் உடல் மிகவும் மெலிந்திருப்பதும் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறது.

இப்படி தன்னுடைய கதாபாத்திரத்திற்காக தன்னை செதுக்கிக் கொண்ட விக்ரமின் உழைப்பு வீணாகாது என்றே ரசிகர்கள் கருதுகிறார்கள். இந்த ஆண்டிற்கான தேசிய விருதுகள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் போது அதில் கண்டிப்பாக விக்ரமின் பெயர் இருக்க வேண்டுமென்றே அவர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், ஏதோ ஒரு ஹிந்திப் படத்தில் நன்றாக பாட்டுப்பாடி ஆடிய ஒருவருக்கு அந்த விருது போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஐ படத்திற்காக உடலை மிகவும் வருத்திய விக்ரமிடம் மருத்துவர்களே எச்சரித்தாகவும் கூட தகவல்கள் வெளியாகின.  விக்ரமின் உழைப்பு வீணாகாமல் விருதுகள் அவருக்குக் குவியுமா என்பதே அடுத்த கேள்வியாக இப்போது எழுந்துள்ளது...! 


Post your comment





Related News
18 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள படத்தில் விக்ரம்
சிவாஜியுடன் ஒப்பிடாதீர்கள் - விக்ரம் பிரபு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
விக்ரம் பிரபு, அர்ஜுன், ஜாக்கி ஷெராப் நடிக்கும் வால்டர்
வைரலாகும் சாமி ஸ்கொயர் டிரைலர், டிரெண்டிங்கில் நம்பர் 1
ஆறுச்சாமியின் ஆட்டம் எப்போது? ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி
கர்ணனுக்காக உடல் எடையை ஏற்றிய விக்ரம்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கேரள மழை வெள்ளம் - பிரபு, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் நிதியுதவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions