விக்ரமுடன் ஜோடி சேர விரும்பும் நாயகி அபர்ணா!

Bookmark and Share

விக்ரமுடன் ஜோடி சேர விரும்பும் நாயகி அபர்ணா!

மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர் அபர்ணா பாலமுரளி. அப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் வெளியான முத்தச்சி கதா படத்திலும் நடித்திருந்தார் இவர்.

இந்நிலையில் இவர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலேயே நடிகர் விக்ரமின் தீவிர ரசிகையாம். தான் நடிகையாவேன் என்று நம்பியதை விட, என்றாவது ஒருநாள் விக்ரமை சந்திப்பேன் என்று உறுதியாக நம்பினாராம். அந்த வாய்ப்பும் சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அபர்ணாவுக்கு கிடைத்து விட்டதாம்.

அதாவது அந்த விழாவில் கலந்துகொள்ள விக்ரம், குஷ்பூ ஆகியோர் வந்திருந்த போது குஷ்புவிடம் பேசிய அபர்ணா, தான் விக்ரமின் தீவிர ரசிகை என்றும், அவரது எந்த புகைப்படத்தை தன்னிடம் காட்டினாலும் அது எந்தப்படத்தில் எந்த காட்சியில் அவர் நடித்தது என தன்னால் உடனே சொல்ல முடியும் என குஷ்புவிடம், கூறிஉள்ளார்.

இந்த தகவலை அவர் விக்ரமிடம் சொல்ல, அவரும் அபர்ணாவிடம் தனது மகிழ்ச்சியை தெரிவித்தாராம்.. அந்தவிதமாக விக்ரமை சந்தித்து அவருடன் போட்டோ எடுக்கும் ஆசையை நிறைவேற்றிக்கொண்ட அபர்ணா விக்ரமுடன் ஒரு படத்தில் ஒரு சின்ன கேரக்டரிலாவது நடித்துவிடவேண்டும் என்றும் கூறிவுள்ளாராம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions