'ஐ' யின் தொடர் சாதனை...!

Bookmark and Share

'ஐ' யின் தொடர் சாதனை...!

'ஐ' படம் பலத்த எதிர்பார்ப்பில் ஜனவரி மாதம் 14ம் தேதியன்று வெளியானது. வெளியான நாள் முததலே இந்தப் படம் ஷங்கரின் முந்தைய படங்களைக் காட்டிலும் அதிகமான விமர்சனத்துக்குள்ளாகியது.

அவருடைய மற்ற படங்களைப் போல் இந்தப் படம் இல்லை, இந்தப் படத்திற்கு முன்னர் வந்த படங்களில்தான் ஷங்கர் கடுமையாக உழைத்திருந்தார், இந்தப் படத்தில் பெரிதாக ஒன்றுமில்லை, விக்ரமின் நடிப்பைத் தவிர, என பல்வேறு தரப்பட்ட விமர்சனங்கள் வெளிவந்தன.

ஆனால், அப்படிப்பட்ட அனைத்து விமர்சனங்களையும் மீறி ஷங்கரின் முந்தைய படங்களைக் காட்டிலும் 'ஐ' படம் வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. நாம் முன்னரே தெரிவித்திருந்தபடி 'ஐ' படம் 200 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக தமிழ்த் திரையுலக வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஹிந்தியில் மட்டும் எதிர்பார்த்தபடி ஓடவில்லை என்றாலும் தெலுங்கிலும் படம் 50 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை ஈட்டி லாபத்தைக் கொடுத்துள்ளது. ஆனாலும், இந்தப் படத்தை தொடர்ந்து தோல்விப் படம் என்றே தெலுங்கு மீடியாக்கள் எழுதி வருகின்றன.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளையும் சேர்த்து இதுவரை 'ஐ' படம் திரையரங்குகள் மூலம் மட்டுமே 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாம். இன்னும் இந்தப் படம் உலகில் உள்ள சில மொழிகளில் வெளியாக உள்ளது, குறிப்பாக சீனாவில் அதிகத் திரையரங்குகளில் வெளியிடும் முயற்சிகள் நடந்து வருகிறது.

மற்ற உரிமைகள், வெளிநாட்டு மொழிகளில் வியாபாரம்  என இந்தப் படத்தின் வியாபாரம் முழுவதும் முடிவடையும் போது ’எந்திரன்’ படத்தின் மொத்த வியாபாரத்தையும் மிஞ்சி தமிழில் அதிக வசூலையும், வியாபாரத்தையும் புரிந்த படம் என முதலிடத்தில் வந்து நிற்கும் என்றும் சொல்கிறார்கள்.

இன்னும் சில வாரங்களில் அல்லது மாதங்களில் இந்த மொத்த வியாபாரத் தொகை பற்றிய விவரம் முழுமையாகத் தெரிய வரும்.


Post your comment





Related News
ஐ பட சம்பளத்தில் பாதியை மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு தானம் செய்த விக்ரம்?
10 கெட்டப்.. 4 வேடம்... திகில் காதல்... பட்டையைக் கிளப்ப வரும் \"ஐ\" விக்ரம்!
ஐ - நிச்சயம் ஹாலிவுட் படம் தான் - விக்ரம் பேச்சு
நடிப்பு அர்ப்பணிப்பில் கிறிஸ்டியன் பாலேவை மிஞ்சிய விக்ரம்
விக்ரமின் ஐ ஜனவரி 9-ம்தேதி ரிலீஸ்
ஒரு மாடலின் உழைப்பும், வேதனைகளுமே ஐ படம்! -சொல்கிறார் சீயான் விக்ரம்
ஷங்கர், விக்ரமின் 2 வருட உழைப்பின் பயனான \'ஐ\' படத்தை வாங்கிய ஜெயா டிவி
ஐ படத்துக்காக 2 வருடம் தவமிருந்த விக்ரம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions